அண்ணா பல்கலையில் பட்டமளிப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா பல்கலையில் பட்டமளிப்பு விழா

Added : மே 20, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அண்ணா பல்கலையில் பட்டமளிப்பு விழா

சென்னை: அண்ணா பல்கலை யில், முதல் முறையாக துணைவேந்தர் இன்றி, பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், இரண்டு லட்சம் பேருக்கு பட்டங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன.
அண்ணா பல்கலை யில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. இந்நிலையில், 37வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. உயர்கல்வி முதன்மைச் செயலர், சுனில் பாலிவால், கையெழுத்திட்ட பட்டங்கள் வழங்கப்பட்டன. கவர்னர் வித்யாசாகர் ராவ், 'இஸ்ரோ' பெங்களூரு மைய இயக்குனர், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர். இரண்டு லட்சம் பேருக்கு பட்டங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. அவர்களில், 1,507 பேர், பிஎச்.டி., ஆராய்ச்சி மாணவர்கள், 64 தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்கள், நேரடியாக பட்டங்களை பெற்றனர்.

விழாவில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: மாணவர்கள், தங்களின் புதிய கண்டுபிடிப்பு எண்ணங்களை வெளிப்படுத்த வெட்கப்படக் கூடாது; அதற்காக பெருமைப்பட வேண்டும். புதுமையான விஞ்ஞானப்பூர்வ எண்ணங்கள் உருவானால், அதை வெளிப்படுத்தும் போது, உங்களுக்கு பெரிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த தேசம், இன்னும் அதிகமான புதுமைகளை தேடிக் கொண்டிருக்கிறது; அவற்றை உள்வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது. எனவே, மாணவர்கள் வலது, இடது என, எந்த பக்கமும் சாயாமல், நேரடியாக உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள். மிகப்பெரிய இலக்கை நோக்கி, நீங்கள் செல்லும் போது, அதில் உங்களின் தனி மனித சிறு மகிழ்ச்சியையும் தவிர்க்க வேண்டாம். எப்படி பெரிய இலக்கை நோக்கி செல்கிறீர்களோ, அதே போல், மனிதாபிமானம் கொண்ட, தந்தைக்கு நல்ல மகன், மகளாக, நல்ல கணவன், மனைவி யாக, நாட்டின் நல்ல குடிமகனாக பொறுப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது தான், உங்கள் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் உதவும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A shanmugam - VELLORE,இந்தியா
20-மே-201711:21:47 IST Report Abuse
A shanmugam துணைவேந்தரே இல்லாமல் நடக்கும் ஒரு பட்டமளிப்பு விழா என்றால் அது தமிழகமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில் சிறுத்தும் ஐயம் இல்லை. இன்று தமிழ் நாட்டில் நாடாகும் எடப்பாடி ஆட்சி எப்படி உள்ளது என்றால் " ஓட்டை சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி" என்ற போக்கில் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-மே-201706:43:04 IST Report Abuse
மலரின் மகள் பட்டமளிப்பு உரை என்பது எவ்வாறு இருக்கவேண்டும் என்ற முறை என்றோ காற்றில் பறந்து விட்டது. பொதுவான ஒரு அறிவுரையாக சொல்கிறார்கள். அவ்வாறு இயற்ரக கூடாது. மு வ வின் பட்டமளிப்பு விழா உரையை படித்து பார்த்தால் தெரியும். இவர்கள் அதை படித்ததே இல்லை ஏன்னு தெரிகிறது. ஒருவர் ஏன் அடிக்கடி பட்டமளிப்பு விழாவில் ஆஜராகிறார் என்று தெரியவில்லை. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு மற்றவர்களை முந்தினேன் என்று சொன்னவர் அவர். அவரை கொங்கு மண்டலத்தில் இப்போதெல்லாம் யாரும் அழைப்பதே இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு கிழமைகளில் தவறாமல் கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாவிற்கு சென்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதே கடமையாக செய்தார். ரோஜாவின் ராஜ நேரு தனக்கு அளிக்கப் பட்ட ஒவ்வொரு பரிசு பொருட்களையும் அரசாங்கத்தின் அருங்காதசியகத்தில் சேர்த்தார். அதுபோலவே சி எஸ் ஐ ஆரின் அறிவியலாளராகளும் எய்கிறார்கள். அது விதி. ஒரு சிலர் அதை செய்வதில்லை, அந்த பாட்டில் பெண் ஜனாதிபதிபோல தங்கள் வீட்டிற்கு எடுத்து கொண்டு சென்றுவிடுகிறார்கள். பொதுவாக சொன்னேன். அந்த விதி தெரியவந்ததால் சக விஞ்ஞானிகள் எல்லி நகை ஆடியதால், பரிசு பொருட்களை மேடையில் வாங்குவதில்லையாம். ஒரு சிலர். அதற்கு பதிலாக மனையாள் வந்து மேடைக்கு கீழே அமர்ந்து அதற்கீடான ஒன்றை கேட்டு பெற்றாராம். எ து எதோ நமது மோடிஜி அவர்களால் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் இரண்டாவது முறையாக செய்யப் பட்ட ஒன்றாம். இருபத்தைந்து கே ஐந்து வருடங்களுக்கு முன்பு என்று சொன்னார்கள். அது போன்ற சில அறிவியல் விஞ்ஞானிகளை ஒதுக்க வேண்டும். அதுபோன்று பட்டம் பெற்ற பொறியியலாளர்கள் இருக்க கூடாது. லஞ்சம் தவிர நெஞ்சம் நிமிர் என்றும் சொல்லி இருக்கலாம். ஆனால் அது பட்டமளிப்பு விழாவில் சொல்ல வேண்டிய உரை அல்ல. அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதி இருக்கிறேன். கூடி கழித்து புரிந்து கொள்ள வேண்டும். அல்லது கொங்கு மண்டலத்து கல்லூரி மேலாளர்களை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். தெளிவாக எழுதினால் சில குழப்பங்கள் வந்துவிடலாம் கருத்துக்கள் பிரசுரமாகாமல் தடை பட்டு விடலாம். ஆகையால் தான் அப்படி இப்படி என்று எழுதவேண்டி இருக்கிறது. சி எஸ் ஐ ஆர் பல்கலையாக அதற்கு இணையாக செயல்படும் வகையில் சட்ட அமைப்பு உருவாக்கப் பட்டது. அதன் மூலம் நாடு முழுதும் வயற்கைவழிகள் அவர்கள் நிறுவனத்தில் நடத்தப படுவது அதில் சேர்வதற்கு உண்டான நடைமுறைகள் பலன்கள் பற்றி யாரும் பேசுவதும் எழுத்துவம் இல்லை. சி எஸ் ஐ ஆரின் கல்வி பனி பரவலாக அனைவருக்கும் தெரிய படுத்தப் படவேண்டும். எனக்கு தெரிந்த நிறைய விஞ்ஞானிகள் பாடம் எடுக்கிறார்கள் அவர்ளின் நிறுவனங்களில் கடந்த சில வருடங்களாகத்தான் கல்வி ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
20-மே-201705:23:08 IST Report Abuse
Amirthalingam Sinniah வாழ்த்துக்கள். இப்படியாந அறிவுரைதான் தேவை மாணவர்களுக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை