பூமிக்குள் இறங்கியது வீடு: உயிர் தப்பிய 5 பேர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூமிக்குள் இறங்கியது வீடு: உயிர் தப்பிய 5 பேர்

Added : மே 20, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பூமிக்குள் இறங்கியது வீடு: உயிர் தப்பிய 5 பேர்

திருப்பூர்: திருப்பூரில், ஒரு வீட்டின் அறை திடீரென பூமிக்குள் இறங்கியதால், பொருட்கள் சரிந்து விழுந்தன; வீட்டில் இருந்த ஐந்து பேர், அதிர்ஷ்டவசமாக தப்பினர். திருப்பூர், வளையங்காடு, வ.உ.சி., நகரில், மணி என்பவர், ஒன்பது வீடுகள் கட்டி, வாடகைக்கு விட்டுள்ளார். ஒரு வீட்டில், பனியன் தொழிலாளி, செல்லையா, 61, குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று வீட்டில், செல்லையா, மனைவி, மருமகள், இரண்டு பேரன்கள் இருந்தனர். காலை, 8:30 மணியளவில், வீட்டின் முன் அறை, 10 அடி ஆழத்துக்கு, திடீரென பூமிக்குள் இறங்கியது. பீரோ, நாற்காலி, 'டிவி' உட்பட உபகரணங்கள் சரிந்து விழுந்தன. இந்த அறையில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

வீட்டின் உரிமையாளர் மணி கூறுகையில், ''வீடு கட்டும் முன், இந்த இடத்தில் கிணறு
இருந்தது. கழிவு நீர் குழாயிலிருந்து, நீர் கசிந்துள்ளது. மழையும் பெய்ததால், தரை தளம் உள்ளே இறங்கியது,'' என்றார்.கிணறு இருப்பது தெரிந்தும், அதை முறையாக மூடாததால்,
இந்நிலை ஏற்பட்டுஉள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karunchilai - vallam,இந்தியா
20-மே-201719:29:42 IST Report Abuse
karunchilai சென்னை சாலை விரிசல் போலத்தான். மேலே தூக்கி நிறுத்தி செலோ டேப் வைத்து ஓட்டிவிடலாம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201709:07:20 IST Report Abuse
Srinivasan Kannaiya சும்மா கொஞ்சம் காலி நிலம் இருக்க கூடாது ... உடனடியாக நமது காசு ஆசை பிடித்த நபர்கள் அதை பிளாட்டாக மாற்றி வித்து விடுவதன் விளைவுதான் இது...அந்த இடம் குளமாக இருந்து இருக்கலாம்..இல்லை கலர் நிலமாக இருந்து இருக்கலாம்... அல்லது பொதை குழியாக இருந்து இருக்கலாம்... எதை பற்றியும் கவலை படுவதில்லை... குந்த குடிசை வேண்டும்... என்ற நோக்கில் செயல்பட்டால்..இதுதான் விளைவாக இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan N - Chennai,இந்தியா
20-மே-201708:48:44 IST Report Abuse
Srinivasan N நிகழ்வு ஏற்பட்டவுடன் விளக்கம். ஆனால் கட்டும்போது?
Rate this:
Share this comment
karunchilai - vallam,இந்தியா
20-மே-201719:30:14 IST Report Abuse
karunchilaiசென்னை அண்ணா சாலை நினைவிற்கு வந்தது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை