நேரம் வரும் போது களத்தில் குதிப்பாராம் : சொல்கிறார் ரஜினி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நேரம் வரும் போது களத்தில் குதிப்பாராம் : சொல்கிறார் ரஜினி

Added : மே 20, 2017 | கருத்துகள் (35)
Advertisement
நேரம் வரும் போது களத்தில் குதிப்பாராம் : சொல்கிறார் ரஜினி

சென்னை: ''எதிர்ப்பு இல்லாமல் வாழ முடியாது; வளர முடியாது. எதிர்ப்பே அரசியலுக்கு மூலதனம். நேரம் வரும் போது, போர் களத்தில் குதிப்போம்; அதற்கு தயாராக இருங்கள்,'' என, நடிகர் ரஜினி பேசினார்.

நடிகர் ரஜினி, சென்னை, ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மே, ௧௫ முதல், தன் ரசிகர்களை சந்தித்து வந்தார். நேற்று, ஐந்தாவது நாளாக ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது, ரஜினி பேசியதாவது: என் முதல் நாள் சந்திப்பின் போது, 'நான் அரசியலுக்கு வந்தால், எப்படி இருக்க வேண்டும்' என, ரசிகர்களுக்கு கூறினேன். என் பேச்சு, இவ்வளவு பெரிய சர்ச்சையாக, விவாதப் பொருளாக இருக்கும் என, நான் நினைக்கவில்லை.
விவாதங்கள், எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே இருக்கலாம். எதிர்ப்பு இல்லாமல் வாழ முடியாது; வளர முடியாது. அரசியலுக்கு, எதிர்ப்பே மூலதனம். என் பேச்சை, சமூக வலைதளங்களில் விமர்சிக்கும் தமிழ் மக்கள், பயன்படுத்தும் வார்த்தைகள், எனக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளன.
ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனக்கு, 67 வயதாகிறது. 23 ஆண்டுகள் கர்நாடாகாவில் இருந்தேன்; 44 ஆண்டுகளாக, தமிழகத்தில் உங்களுடன் இருக்கிறேன். கர்நாடகாவில் இருந்து, ஒரு மராட்டியனாகவோ, கன்னடனாகவோ வந்திருந்தாலும், ஆதரித்து, பெயர், புகழ், பணம் எல்லாம் அள்ளிக் கொடுத்து, நீங்கள் என்னை தமிழனாக மாற்றி விட்டீர்கள்; நான் ஒரு பச்சை தமிழன். என் மூதாதையர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்கள். நீங்கள் என்னை துாக்கி எறிந்தாலும், இமயமலையில் தான் போய் விழுவேனே தவிர, வேறு எந்த மாநிலத்திலும் போய் விழ மாட்டேன். ஸ்டாலின் நல்ல திறமையான நிர்வாகி. அன்புமணி நன்றாக படித்தவர்; உலகம் முழுவதும் சுற்றியவர்; நல்ல திட்டங்கள் வைத்துள்ளார்.
திருமாவளவன், ஆதிதிராவிட மக்களுக்காக உழைக்கிறார். சீமான் போராளி; அவரது கருத்துக்களை கேட்டு பிரமித்து போயிருக்கிறேன். இவர்களை போல, தேசிய கட்சிகளிலும், இன்னும் பலர் இருக்கின்றனர். ஆனால், அரசியலில் மாற்றம் வேண்டும். நாம் அனைவரும் அவரவர் கடமைகளை ஒழுங்காக செய்வோம். நேரம் வரும் போது, போர் களத்தில் இறங்குவோம்; தயாராக இருங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jeyaseelan Jawahar - Doha,கத்தார்
20-மே-201716:21:31 IST Report Abuse
Jeyaseelan Jawahar இன்னமும் இந்த கிறுக்கனை நம்பி ரசிகர்கள் ஏமாறுகிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-மே-201715:32:44 IST Report Abuse
இந்தியன் kumar நிறைய கட்சினரின் புலம்பல் இங்கு தெரிகிறது , காரணம் ரஜினி அரசியலுக்கு வந்தால் நம் பிழைப்பு டப்பா டான்ஸ் ஆடி விடும் என்பதால் தான் , கன்னடன் என்று புலம்பும் இவர்கள் கலைஞர் , அம்மாஜி இவர்கள் பூர்வீகம் என்ன ? இவர்களின் ஐம்பது ஆண்டு கால சாதனை என்ன ? ஒரு காலத்தில் மது குடிப்பவன் எண்ணிக்கை ஐந்து சதவிகிதம் இருந்தது ஆனால் இன்று ஐந்து சதவிகிதம் குடிக்காமல் இருந்தால் அதிகம் , இதட்கு காரணம் யார் ? திமுக ,அதிமுக ஆட்சிகளே , இந்த கட்சியில் உள்ளவர்கள் தான் பெரும்பாலும் மது ஆலைகள் நடத்துகிறார்கள் , இன்று பெண்கள் போராட்டம் எல்லா ஊரிலும் நடக்கிறது அந்த அளவுக்கு மதுவால் பாதிப்பு. 2 அடுத்து லஞ்சம் , இன்று லஞ்சம் வாங்காத துறைகள் என்று ஓன்று கூட இல்லை , அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் போட்டி போட்டு கொண்டு லஞ்சம் வாங்குகின்றனர் , எல்லா வேலைக்கும் காசு என்கிற நிலை தான் இருக்கிறது , காசு உள்ளவன் அரசு வேலைக்கு செல்லலாம் என்று சூழ்நிலை ஆகி விட்டது . காசு கொடுத்து வேலைக்கு சேர்ப்பன் எப்படி நேர்மையாக இருப்பான் ?. அடுத்து இலவசம் , மக்களை கை எந்த வைத்தது , வோட்டுக்கு காசு கொடுத்து மக்களையும் லஞ்சம் வாங்க வைத்து இன்று பெரும்பான்மை மக்களையும் கெடுத்து குட்டி சுவராக்கி விட்டனர் இந்த கழகங்கள் , அடுத்து நீர் பிரச்சினை கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் கட்டிய அணைகள் எதனை ? நீர் சேமிப்புக்காக ஆண்ட ஆளும் அரசுகள் செய்தது என்ன ? நதிகளில் தடுப்பணைகள் கட்டி இருந்தால் மழை நீர் கடலுக்கு செல்லாமல் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் , குஜராத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆந்திராவில் நதிகள் இணைக்கப்படும்போது இங்கு மட்டும் சாத்தியாகமாகாது ஏன் ? கடந்த தேர்தலில் மாற்றம் வேண்டும் என்று தான் ம நல கூட்டணி , பாஜக , பாமக , நாம் தமிழர் என்று போட்டி இட்டன , இவர்கள் சார்பாக ஒருவராவது வெற்றி பெட்டனரா ? இல்லை ஒருவர் கூட வெற்றி பெற வில்லை காரணம் 234 தொகுதியிலும் பணம் தான் விளையாடியது இரண்டு தொகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது ஆனாலும் பணம் தான் வென்றது காரணம் பணம் தான் , மோடிஜி வந்தும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை . அன்புமணி தான் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்பீ தொகுதியில் உள்ள பென்னாகரம் தொகுதியில் தோற்றார் . சீமான் கடலூர் தொகுதியில் ஐந்தாவது இடம் பெற்று வாய்ப்பு தொகை இழந்தார் . கேப்டன் மூன்றாவது இடம் பெற்றார் . காரணம் 234 தொகுதியிலும் பணம் தான் வெற்றி பெற்றது. திமுக வைகோ போட்டியாளராக வந்து விடுவார் என்று நினைத்து தேமுதிகவை உடைத்து வைகோ 1500 கோடி வாங்கி விட்டதாக சபரீசன் டீம் மூலம் பொய் பிரசாரம் பண்ணி அவர் பெயரை கெடுத்து விட்டு இன்று சட்டையை விளித்து விட்டு கேவலமான அரசியல் செய்கிறார் ஸ்தாலின் . கடந்த தேர்தலில் மாற்றம் வேண்டும் கரடியை கத்திய அன்புமணி , சீமான் இவர்கள் வாங்கிய வாக்கு சதவிகிதம் என்ன ??? திமுக அதிமுக நகர செயலாளர்கள் கூட கோடீஸ்வரர்கள் . ரெய்சன் கடையில் இருந்து இரண்டு கட்சிகளுக்கும் மாமூல் செல்கிறது இதை யாரும் மறுக்க முடியுமா ?? திமுக அதிமுக இரண்டும் ஊழல் கட்சிகள் என்றாலும் அதிமுக அடிமைகள் ஊழல் மட்டும் செய்வார்கள் , திமுக ரவுடிகள் ஊழல் மட்டுமில்லாமல் ரவுடியிஸமும் செய்வார்கள் , திமுகவுக்கு பயந்து தான் நிறைய பேர் அம்மாஜிக்கு வாக்களித்தனர் , இருவரும் வேண்டாம் . புதியவர் வேண்டும் யார் அந்த பணியை செய்வது ரஜினி அவர்கள் அரசியலில் களம் இறங்கி நேர்மையான நல்லவர்களை உடன் வைத்து இந்த சிஸ்டம் மாற்ற முயட்சி எடுக்க வேண்டும் தமிழகத்திட்கு தேவை அறுவை சிகிச்சை அதனால் தான் தமிழகத்தை காக்கமுடியும் . ரஜினி அந்த முயட்சியை செய்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் , செய்வாரா ரஜினி இதுதான் பெரும்பான்மையான நடு நிலை மக்களின் எதிர்பார்ப்பு , நல்லதை ஜே நினைப்போம் நல்லது நடக்கும்
Rate this:
Share this comment
Kalyani S - Ranipet,இந்தியா
22-மே-201708:48:27 IST Report Abuse
Kalyani Sமுதலில் ரஜினியை அவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு அதற்கு அவர் கட்டும் வருமான வரி எவ்வளவு என்று நீங்களே அவரை நேரிடையாக கேட்டு மக்களுக்கு தெரிவித்தால் மக்கள் அவரை நேர்மையானவர் என்று நினைக்க வழிபிறக்கும். அதை விட்டு விட்டு அவர் கெட்டவர் , இவர் கெட்டவர் என்று கூறிக்கொண்டிருந்தால் ரஜினியை நேர்மையானவர் என நம்ப நாங்கள் ஒன்றும் இந்தியன் குமார் அல்ல....
Rate this:
Share this comment
இந்தியன் kumar - chennai,இந்தியா
22-மே-201713:31:55 IST Report Abuse
இந்தியன் kumarவைகோ , அன்புமணி திருமா வாசன் சீமான் நல்லவர்கள்தான் , நேர்மையானவர்கள்தான் இவர்களால் முடியவில்லை ரஜினியால் ஊழல் கழகங்களை வீழ்த்த முடியும் என நம்புகிராய்...
Rate this:
Share this comment
Cancel
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
20-மே-201714:58:38 IST Report Abuse
எமன் அட இவருக்கு வேற வேலைல்லப்பா. சும்மா புலி வருது புலி வருதுன்னு பயமுறுதின்னுகிறாரு. இனி எப்போதுமே இவரு பருப்பு தமிழ்நாட்ல வேகாதுனு தெரியாம இன்னும் தன்னை பெரிய அறிவாளி நினைச்சிக்கிறாரு.
Rate this:
Share this comment
Cancel
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
20-மே-201714:11:36 IST Report Abuse
Amanullah ஷ்... ஷஷப்பா....முடியல...
Rate this:
Share this comment
Cancel
Chonkan Vellaisamy - Chennai,இந்தியா
20-மே-201713:50:17 IST Report Abuse
Chonkan Vellaisamy தமிழ் நாடும் தமிழ் நாட்டு மாக்களும் நாசமா போவதை தவிர வேறு வழியே இல்லையா போருக்கு தயாராக இருங்கள், ஆண்டவன் நினைத்தால் (ரொம்ப நாளை தேடிகிட்டு இருக்கிறேன்) அரசியலுக்கு வருவேன். அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமை. யார் வேணாலும் கட்சி அமைக்கலாம் ஆட்சிக்கு வரலாம். ரஜினி அவர்கள் கட்சி ஆரம்பித்து ஒரு வேளை வெற்றி பெற்று முதர்வர் ஆகிவிட்டார் என்றே வைத்து கொள்வோம். 5 வருடங்கள் அல்லது MGR போல 10 வருடங்கள் ஆட்சி நடத்தலாம். அவருக்கு பிறகு இன்றைக்கு அதிமுகவில் ஏற்பட்ட நிலைமை தான் தமிழ்நாட்டிற்கு வரும். பிறகு அஜித் அல்லது விஜய்.. வெக்கமாக இல்லை. தன்னுடைய வாழ்க்கையை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்தவர்கள், தமிழ் மக்களுக்காக நடையா நடந்து இந்த மக்களும், மண்ணும் நல்ல இருக்க வேண்டும் என்று நினைக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள், தமிழ் மொழி வாழ வேண்டும், தமிழ் மக்கள் வாழ்கை உயர வேண்டும் என்று பாடுபடும் தலைவர்கள் இருக்கிறார்கள். இப்படி எத்தனையோ நல்ல தலைவர்கள் தமிழ்நாட்டில் இருக்கோம் பொழுது..தன்னை சிங்கம், புலி, சிறுத்தை என்று சொல்லிக்கொண்டு சாதி பெருமை பேசிக்கொண்டு திரியும் மக்கள் கண்டிப்பாக நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க போவதில்லை. ரஜினி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். காரணம் ரஜியினின் திறமையோ, செல்வாக்கோ, புகழோ அல்ல. தமிழனின் சாதி. தமிழனின் முட்டாள்தனம், தமிழனின் குடி, தமிழனின் சினிமா மோகம். தமிழன் என்றே சொல்லடா.. தலை குனிந்தே நில்லடா..
Rate this:
Share this comment
Cancel
Vel - Chennai,இந்தியா
20-மே-201713:19:07 IST Report Abuse
Vel இந்த AC பஸ் வரும் வரும்னு காத்திருந்தவங்க எல்லாம் காத்திருந்து காத்திருந்து கிடைச்ச வண்டியை பிடிச்சு போய் சேந்துட்டாங்க. ஆனா இந்த பஸ் ஓட்டையாகி போனாலும் இன்னு வரலே. இந்த கண்டக்டர் எந்த டிரைவருக்காக காத்திருக்கிறாரோ
Rate this:
Share this comment
Cancel
20-மே-201712:45:39 IST Report Abuse
எப்போதும் வென்றான் பார்த்து குதிக்க சொல்லுங்க... படாத எடத்துல பட்டுட போகுது
Rate this:
Share this comment
Cancel
sampanthasuganya - Dubai Media city ,ஐக்கிய அரபு நாடுகள்
20-மே-201711:48:07 IST Report Abuse
sampanthasuganya ரஜினி தமிழ் நாட்டுல சிஸ்டம் கேட்டு போகியிருக்குன்னு சொல்லுராரே இந்த சிஸ்டம் கேட்டு போனதுக்கு இவர் ஒரு முக்கிய காரணம் , இதுவரை தமிழ் நாட்டுல எத்தனை முறை நல்ல விஷயத்துக்காக போராடியிருக்கிறார், நடிச்சி தமிழ் நாட்டிடை ஏமாத்தி காசுசம்பாரிச்சிமுடிச்சியாச்சி இனிமேல் அரசியல்ல காசுசாம்பாரிச்சி கர்நாடகாவுக்கு எடுத்துக்கிட்டு போகணும் அதுக்குதான் இப்ப நடிக்கிறான்.
Rate this:
Share this comment
Cancel
Aswini kumar - chennai,இந்தியா
20-மே-201711:44:47 IST Report Abuse
Aswini kumar " நானொரு கை பார்க்கிறேன்..நேரம் வரும் கேட்கிறேன்..பூனை அல்ல புலிதான் என்று போக போக காட்டுகிறேன் ".. இப்படி சவால் விட்டு வெற்றி பெற்ற சிங்கம் தான் MGR அவர்கள்.. 100 ரஜினி வந்தாலும் ஒரு MGR ஆகமுடியாது
Rate this:
Share this comment
Cancel
Kalyani S - Ranipet,இந்தியா
20-மே-201711:31:21 IST Report Abuse
Kalyani S "நேரம் வரும் போது களத்தில் குதிப்பாராம்".................... குதித்தவுடன் பாருங்கள் அது ரஜினியின் டூப்பாகத்தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை