42 படகுகள் விடுவிப்பு : இலங்கை மந்திரி தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

42 படகுகள் விடுவிப்பு : இலங்கை மந்திரி தகவல்

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்: 'இலங்கை வசமுள்ள, 143 தமிழக மீனவர்களின் படகுகளில், 42 படகுகள் விடுவிக்கப்படும்' என, இலங்கை மீன்துறை அமைச்சர், மகிந்த அமரவீரா தெரிவித்தார்.
கடந்த, 2015 முதல், 2017ம் ஆண்டு வரை ராமேஸ்வரம், துாத்துக்குடி, புதுக்கோட்டை, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து, மீன் பிடிக்க சென்ற விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை வீரர்கள், மீனவர்களை மட்டும் விடுவித்தனர்.
ஆனால், 25 கோடி ரூபாய் மதிப்புள்ள, 143 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்தது. இதனால், படகு உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். மே 12ல், இலங்கை சென்ற பிரதமர் மோடி, படகுகளை விடுவிக்க வலியுறுத்தினார். இந்நிலையில், இலங்கை மீன்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா, 'வடக்கு மாகாண மீனவர்கள் சம்மதத்துடன், 42 படகுகள் விடுவிக்கப்பட உள்ளன. விரைவில் அந்த படகுகள், தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.ராமேஸ்வரம் மீனவர்கள், 'வெறும், 42 படகுகளை மட்டும் இலங்கை விடுவிப்பது வருத்தமளிக்கிறது. மீதமுள்ள, 101 படகுகளை விடுவிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை