ஊட்டியில் மலர் கண்காட்சி துவக்கம்: பயணியரை கவர்ந்த மாமல்லபுரம் கோவில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் மலர் கண்காட்சி துவக்கம்: பயணியரை கவர்ந்த மாமல்லபுரம் கோவில்

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஊட்டியில் மலர் கண்காட்சி துவக்கம்: பயணியரை கவர்ந்த மாமல்லபுரம் கோவில்

ஊட்டி: ஊட்டியில், நேற்று துவங்கிய, 121வது மலர் கண்காட்சியில், ஒரு லட்சம் கொய்மலர்களால் உருவாக்கப்பட்ட, மாமல்லபுரம் கடற்கரை கோவிலின் மாதிரி வடிவம், சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தது.

நீலகிரியில் கோடை சீசன், களை கட்டியுள்ளது.முக்கிய நிகழ்ச்சியான, மலர் கண்காட்சியை, முதல்வர் பழனிசாமி, ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று துவக்கி வைத்தார்.

மலர் தொட்டிகள் : பின், பூங்கா முகப்பு புல்தரையில், 1 லட்சம் கொய்மலர்களால் உருவாக்கப்பட்ட, மாமல்லபுரம் கடற்கரை கோவில் வடிவிலான அமைப்பை பார்வையிட்டார். இது, 25 அடி நீளம்; 26 அடி உயரம் உடையது. மேடையில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த, 15 ஆயிரம் மலர் தொட்டி கள், ஹாலந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, துலிப் மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன. முதல்வர் பூங்காவை பார்வையிட்டபோது, அவருடன், சுற்றுலா பயணியர், உள்ளூர் மக்களும் சென்று, மலர்களை ரசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

கூட்டமில்லை : மலர் கண்காட்சியின், முதல் நாளாக நேற்று, கூட்டம் எதிர்பார்த்த அளவில் இல்லை. சுற்றுலா பயணியர் சிறப்பு பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். இதனால், ஊட்டி நகரில், வாகன நெரிசல் குறைந்து காணப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை