முதுநிலை மருத்துவ படிப்பு: கல்வி கட்டணம் நிர்ணயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதுநிலை மருத்துவ படிப்பு: கல்வி கட்டணம் நிர்ணயம்

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கல்வி கட்டணத்தை, நீதிபதி பாலசுப்ரமணியன் தலைமையிலான, கமிட்டி அறிவித்துள்ளது.
சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், வரும், 22ல் நடைபெறுகிறது. இந்நிலையில், நீதிபதி பாலசுப்ரமணியன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உட்பட, ஏழு பேர் அடங்கிய கமிட்டி, சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவப் படிப்பு, அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இது பற்றிய விபரத்தை, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில், மருத்துவக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது. l சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள், கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்து, நடப்பு கல்வி ஆண்டுக்கான, முதுநிலை மருத்துவப் படிப்புகான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதுl இதில், விடுதி, போக்குவரத்து, உணவக கட்டணங்கள் அடங்காது. மாணவர்களிடம் இருந்து, மேம்பாட்டு கட்டணமாக, 50 ஆயிரம் ரூபாய் வசூலிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை