பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயார் : ஆய்வுக்கு பின் அருண் ஜெட்லி அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயார் : ஆய்வுக்கு பின் அருண் ஜெட்லி அறிவிப்பு

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஸ்ரீநகர்: ''ஜம்மு - காஷ்மீர் எல்லையில், ராணுவம் தயார் நிலையில் உள்ளது. எந்த ஒரு சூழலை யும் எதிர்கொண்டு, எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க, வீரர்கள் துணிவுடன் உள்ளனர்,'' என, ராணுவத் துறைக்கு கூடுதல் பொறுப்பு வகிக்கும், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று கூறினார்.

அத்துமீறல் : ஜம்மு - - காஷ்மீர் மாநிலத்தில், இந்திய -- பாக்., எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி அருகே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
சமீபத்தில், நம் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்., ராணுவ வீரர்கள், நம் வீரர்கள் இருவரை சுட்டுக் கொன்று, அவர்களின் தலைகளையும் துண்டித்து சென்றனர்.
இதற்கு பதிலடியாக, எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை ஒட்டி, பாக்., எல்லையில் அமைந்திருந்த பதுங்கு குழிகள் மீது, நம் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அடுத்தடுத்த தாக்குதலால், எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பு வகிக்கும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே ஆய்வு செய்தார்.
பின், ராணுவ உயரதி
காரிகளுடன், அவர் விவாதித்தார்.
ஜம்மு - காஷ்மீர்
மாநிலத்தில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்தும், அதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
எதிர்கொள்ளும்
பின், ராம்பூர் பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள வீரர்களுடன் கலந்துரையாடினார். இது குறித்து, அருண் ஜெட்லி கூறியதாவது:
எல்லையில், நம் ராணுவம், எந்த ஒரு சூழலையும், துணிவுட னும், எழுச்சியுடனும் எதிர்கொள்ளும்; அதற்கு ஏற்ற வகையில் வீரர்கள் தயாராக உள்ளனர். ராணுவம், எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும். ராணுவத்தின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை