பிரதமர் ஒப்புதலுக்கு காத்திருக்கும் கூடங்குளம் 5, 6வது அணு உலைகள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதமர் ஒப்புதலுக்கு காத்திருக்கும் கூடங்குளம் 5, 6வது அணு உலைகள்

Added : மே 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: 'தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், ஐந்து மற்றும் ஆறாவது அணு மின் உலைகள் அமைப்பதற்கான திட்டம், பிரதமர் அலுவலக ஒப்புதலுக்காக காத்திருக்கிறது' எனவெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்தின் கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் செயல்படுத்தப்படும், அணுமின் உற்பத்தி திட்டத்தின், ஐந்தாவது மற்றும் ஆறாவது உலைகள் அமைப்பது தொடர்பாக அப்போது பேசப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், என்.எஸ்.ஜி., எனப்படும், அணுசக்தி வினியோக நாடுகள் அமைப்பில் இந்தியா சேருவது குறித்து, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுடன், பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை வெளியுறவுத் துறை மறுத்துள்ளது.
இந்த நிலையில், கூடங்களும் அணு மின் திட்டம் குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
கூடங்குளத்தில், மொத்தம், ஆறு அணு உலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் அணு உலை ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இரண்டாவது உலை, 2016, ஆகஸ்டில் உற்பத்தியை துவக்கியுள்ளது. மூன்று மற்றும் நான்காவது உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், ஐந்து மற்றும் ஆறாவது உலைகளை அமைப்பது தொடர்பான, பொது ஒப்பந்தம் தயாரிப்பு பணிகளை, 2016 இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், சில காரணங்களால் இது தாமதமாகி உள்ளது. தற்போது, இந்த ஒப்பந்தத்துக்கு, பல்வேறு அமைச்சகங்கள் அடங்கிய குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் அலுவலக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகு, ஒப்பந்தம் கையெழுத்தாகும். அதனால், பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின்போது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பில்லை.
இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201709:02:09 IST Report Abuse
Srinivasan Kannaiya நமது தமிழக அரசியல்வாதிகள் கடந்த நாற்பது ஆண்டுகளாக மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் அமைக்காது..வெளி சந்தையில் மின்சாரத்தை வாங்கி பவர் பர்சேஸில் காசு பார்த்துவருகிறார்கள்... இதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணாவதோடு இல்லாமல் மின்சார வாரியமும் மீளமுடியாத அளவில் கடனில் மூழ்கி உள்ளது... நீங்களவாவது இந்த மின்சாரத்தை உற்பத்தி செயது தமிழகத்திற்கு வழங்குங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை