திருமண மண்டபத்தை தீயிட்டு கொளுத்திய காதலி| Dinamalar

திருமண மண்டபத்தை தீயிட்டு கொளுத்திய காதலி

Added : மே 20, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
திருமண மண்டபத்தை தீயிட்டு கொளுத்திய காதலி

புனே: மஹாராஷ்டிராவில், தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காதலனின் திருமண மண்டபத்திற்கு தீ வைத்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், புனே அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 33 வயது ஆணும், அதே பகுதியைச் சேர்ந்த, 36 வயது பெண்ணும், ஆறு ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். காதலனின் பெற்றோர், இவர்களின் காதலுக்கு சம்மதிக்காததால், அந்த நபருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த காதலி, காதலனுக்கு அன்பளிப்பாக கொடுத்த, 'பைக்'கை தீயிட்டு கொளுத்தினார். அதன்பின், காதலனின் திருமண ஏற்பாடுகள் நடைபெறும் மண்டபத்திற்கு சென்ற அவர், அந்த மண்டபத்திற்கும் தீ வைத்தார். காதலியின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த காதலன், இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.வழக்கு பதிவு செய்த
போலீசார், அந்தப் பெண்ணை கைது செய்தனர். அதே சமயம், தன்னை காதலித்து ஏமாற்றி, வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காதலன் மீது, காதலி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீதும் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sagodhary - Paris,பிரான்ஸ்
20-மே-201719:28:29 IST Report Abuse
sagodhary காதலுக்கு கண் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201709:03:39 IST Report Abuse
Srinivasan Kannaiya கண்ணகி அங்கே சென்று பிறந்து விட்டாரோ...
Rate this:
Share this comment
J-Gun - chennai,இந்தியா
20-மே-201722:30:01 IST Report Abuse
J-Gunஎன்ன காமடி பண்றீங்க. கண்ணகி தன் கணவனுக்கு தன்னோட சிலம்பை கழட்டி கொடுத்தவளாச்சே?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை