மின்னணு ஓட்டு இயந்திரத்தை சோதிக்க கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மின்னணு ஓட்டு இயந்திரத்தை சோதிக்க கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பரிசோதனை செய்து பார்க்க, அரசியல்
கட்சிகளுக்கு, தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்து உள்ளது. சமீபத்தில், உ.பி., உட்பட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்தன. இதில், நான்கு மாநிலங்களில், பா.ஜ., வெற்றி பெற்றது.
இதையடுத்து, 'மின்னணு ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. காங்., தலைமையில், 13 கட்சிகள், தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்து, 'மின்னணு ஓட்டு இயந்திரத்தில் ஓட்டுப்பதிவு செய்யும் முறையை மாற்றிவிட்டு,
ஓட்டுச்சீட்டு முறையை, மீண்டும்கொண்டு வர வேண்டும்' என, கோரிக்கை விடுத்தன.
இதற்கு பதிலளித்த தேர்தல் கமிஷன், 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்; இதில் யார் வேண்டுமானாலும் முறைகேடு செய்து காட்டலாம்; இதற்கான தேதிகளைஅறிவிப்போம்' என, தெரிவித்தது.இந்நிலையில், டில்லியில், தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை:மின்னணு ஓட்டு இயந்திரங்களை பரிசோதனை செய்து பார்க்க, அரசியல் கட்சிகளுக்கு, முறையாக தேதி ஒதுக்கப்பட்டு, விரிவான பட்டியல் இன்று வெளியிடப்படும். அரசியல் கட்சிகள் பரிசோதனை செய்து பார்ப்பதற்கு முன், தேர்தல் கமிஷனின் இணையதள நேரலையின் மூலம், மின்னணு ஓட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கம்
அளிக்கப்படும்.அதில் சந்தேகம் உள்ளவர்களுக்கு, மீண்டும் தனித்தனியாக அழைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படும். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில், பயன்படுத்தப்பட்டமின்னணு ஓட்டு இயந்திரங்கள் தான், அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் கூட்டங்களில் பயன்படுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை