ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், போலி நிறுவனங்களிடம் இருந்து, பல கோடி ரூபாய் கட்சி நன்கொடையாக பெற்றார். முறைகேடாக சேர்த்த பணம் வீணாய் போகும் என்ற பயத்தால் தான், மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை கடுமையாக எதிர்த்தார்.
கபில் மிஸ்ரா, எம்.எல்.ஏ., - ஆம் ஆத்மி
அரசியல் உள்நோக்கம்!
மத்தியில் ஆளும், பா.ஜ., அரசின் துாண்டுதலாலேயே, எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில், அரசியல் உள்நோக்கம் உள்ளது. என் மகன்களின் சொத்துக்கள் அனைத்தும் முறையாக சம்பாதிக்கப்பட்டவை.
லாலு பிரசாத் யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
மின்சாரம் தேவை!
நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 30 கோடி பேருக்கு இன்னும் மின் இணைப்பு கிடைக்கவில்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க மின் சக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி