கடல் நண்டு திரவம் கொசுக்களை அழிக்கும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடல் நண்டு திரவம் கொசுக்களை அழிக்கும்

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

வேலுார்: ''கடல் நண்டுகளின் ஓடுகளில் இருந்து தயாரிக்கப்படும் திரவம், மலேரியா நோயை பரப்பும் கொசுக்களை, ஆரம்ப நிலையிலேயே அழிக்கிறது,'' என, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன் தெரிவித்தார்.

கோவை பாரதியார் பல்கலையில், விலங்கியல் துறை தலைவராக பணியாற்றிய முருகன், 2016 பிப்ரவரி மாதம், வேலுார் திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தராக பொறுப்பேற்றார்.
இவர், பூச்சியியல், நானோ பூச்சிக்கொல்லிகள் மற்றும் இயற்கை தாவரப் பொருள்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் கூறியதாவது: மலேரியா எனும் தொற்று நோய், காட்டு விலங்குகள் அதிகம் வாழும், ஆப்ரிக்காவில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது. 'அனாபிளஸ்' என்ற ஒருவகை பெண் கொசு கடிக்கும் போது, அதில் இருக்கும், 'பிளாஸ்மோடியா' என்ற கிருமி, ரத்தத்தில் கலப்பதால், மலேரியா நோய் தாக்குகிறது.
ஆப்ரிக்காவில் மட்டும், நிமிடத்துக்கு ஒரு குழந்தை, மலேரியாவால் இறப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொற்று நோய், இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில், வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், தைவானின் தேசிய கடல்சார் பல்கலைக்கழக பேராசிரியர், ஜியாங் ஷியோ ஹூவாங் உடன் இணைந்து, மலேரியாவை பரப்பும் கொசுக்களை அழிப்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.
அப்போது, மலேரியா என்னும் தொற்று நோயை பரப்பும் கொசுக்களை அழிக்க, 'சினோ கிராப்பஸ்' எனும் கடல் நண்டுகளின் ஓடுகளில் இருந்து எடுக்கக்
கூடிய திரவத்துடன், 'சில்வர் நானோ' துகள் கலந்த திரவம், பயனுள்ளதாக இருப்பது தெரியவந்தது.
இந்த திரவம், நல்ல தண்ணீரில் வளரும் மலேரியா நோயை பரப்பும் கொசுக்களை, அதன் ஆரம்ப நிலையிலேயே அழிக்கிறது. மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இயற்கை திரவமாகவும்,
குறைந்த விலையில்
தயாரிக்க கூடியதாகவும் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை