மதுரையில் சொட்டுநீர் பாசன மானியத்தில் முறைகேடு..! விவசாயிகளிடம் 40 சதவீத நிதி வசூலிப்பு | Dinamalar

தமிழ்நாடு

மதுரையில் சொட்டுநீர் பாசன மானியத்தில் முறைகேடு..! விவசாயிகளிடம் 40 சதவீத நிதி வசூலிப்பு

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மதுரையில் சொட்டுநீர் பாசன மானியத்தில் முறைகேடு..! விவசாயிகளிடம் 40 சதவீத நிதி வசூலிப்பு


மதுரை, மதுரை மாவட்டத்தில் சொட்டுநீர் பாசன மானியத்தில் முறைகேடு நடப்பதாகவும், 100 சதவீத மானியத்தில் விவசாயிகளிடம் இருந்து
40 சதவீதம் மறை
முகமாக வசூலிப்பதாகவும், தோட்டக்கலைத்துறை மீது விவசாயிகள் குற்றம் சுமத்தினர்.
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ.,) வேலுச்சாமி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
விவசாயி திருப்பதி: குடிமராமத்து பணிகள் பல இடங்களில் முறையாக நடக்கவில்லை. கண்மாயை துார்வாரும் போது மண் வளம் திருடப்பட்டு,செங்கல் சூளைகளுக்கு விற்கப்படுகிறது.
இதை தடுக்கவும், கண்மாய்கள் முறையாக துார்வாரவும் உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும். எந்தெந்த பணி நடக்கிறது என்பது குறித்து விளம்பர பலகையில் எழுத வேண்டும். குடி மராமத்து பணிகளில் விவசாயிகளை இணைக்க வேண்டும்.
டி.ஆர்.ஓ.,: குடிமராமத்து பணிகள் முறையாக நடப்பதாக பொதுப்பணித்துறையினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதுவரை முடிக்கப்பட்ட பணிகள் குறித்து முழு விவரம் தந்துள்ளனர். துார்வாருதல், வரத்து கால்வாய்கள் பராமரிப்பில் முறைகேடுகள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓய்வு வேளாண் இணை இயக்குனரும், விவசாயியுமான ஜெயசிங்ஞானதுரை: சொட்டுநீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. எனினும் சிறு, குறு விவசாயிகளுக்கு 60 சதவீத மானியம் மட்டுமே கிடைக்கிறது. 40 சதவீத மானியம் மறைமுகமாக விவசாயிகளிடம் பிடுங்கப்படுகிறது. முழு மானியம் கிடைக்க நடவடிக்கை தேவை.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்ற 30 நிறுவனங்கள் உள்ளன.
இவற்றில் சொட்டுநீர் பாசன கருவிகளை கொள்முதல் செய்து, அதற்கான ரசீது வழங்கினால் மானியம் வழங்கப்படும்.
தவிர விவசாயிகள்
தங்கள் நிலத்தில் சொட்டுநீர் பாசன முறைக்கு தோண்டப்படும் குழிகள் மற்றும் போக்குவரத்து செலவுகளுக்கு மானியம் கிடையாது.
விவசாயிகள் நலன் கருதி இலவசத்திற்கான என்னென்ன பொருட்கள் வழங்கப்படுகிறது என்பது தொடர்பான விளம்பர பலகை வட்டார அளவில் ஓரிரு நாட்களில் வைக்கப்படும்.
முதலைக்குளம் எட்டூர் கிராம முன்னேற்ற சங்க தலைவர் ராமன்: முதலைக்குளம், பெரிய கண்மாய் குடிமராமத்து திட்டம் மூலம் நடக்கும் வேலை அனைத்தும் கட்டமைப்புடன் நடக்கவில்லை. இவற்றை முறைப்படுத்த வேண்டும்.
உசிலம்பட்டி வைகை பெரியாறு திருமங்கலம் விரிவாக்க கால்வாய் கரைகள், ஷட்டர்கள் மிகவும் பழுதடைந்துள்ளன. முதலைக்குளம் - கீழப்பட்டி - நடுமுதலைக்குளம் வரை உள்ள கால்வாய் கரைகள் மிகவும் சிதலமடைந்துள்ளது. அவற்றை பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயி கதிரேசன்: கூட்டுறவு வங்கியில் வாங்கிய கரும்பு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தேசிய வங்கியில் கரும்பு பயிர்க்கடனை கட்டாததால் நிலத்தை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சிறு, குறு விவசாயிகளுக்கு அரசின் நடவடிக்கையில் பாகுபாடு உள்ளது. இதை நீக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி: கண்மாய், குளங்களில் உள்ள வண்டல் மண் டிராக்டர் மூலமாக அள்ள தாலுகா அலுவலகத்தில் அனுமதி பெறலாம் என கலெக்டர் அறிவித்தார்.
எனவே வண்டல் மண் அள்ளுவதற்கு விவசாயிகள், அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்தால் தான் உண்மையான பயனாளியை கண்டறிய முடியும்.
டி.ஆர்.ஓ.,: கலெக்டருடன் பேசி குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி பாண்டியன்: குறைந்த தண்ணீரில் அதிக விளைச்சல் தரும் கொய்யா சாகுபடி குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.
கொய்யாக்கன்றுக்கு மானியம் வழங்கப்படுகிறதா. கன்று எங்கெங்கு கிடைக்கிறது.
துணை இயக்குனர் பூபதி: தோட்டக்கலைத்துறையின் பூஞ்சுத்தி பண்ணையில் 4,000 கொய்யாக்கன்றுகள் உள்ளன. இவற்றிற்கு மானிய திட்டம் வரவில்லை. குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். கிணற்று பாசனம் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும்போது, சொட்டுநீர் பாசன முறையில் நான்கு ஏக்கரில் விவசாயம் செய்யலாம். சொட்டு நீர் பாசன முறைக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
விவசாயி ராஜேந்திரன்: காட்டுப்பன்றி தொல்லை அதிகமாக உள்ளது. பயிர்களை சேதப்படுத்துகிறது. கட்டுப்படுத்திட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
சாம்பிராணிபட்டி வனவர்: வன விலங்குகள் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க போன் எண்களுடன் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
டி.ஆர்.ஓ.,: பயிர்களை சேதம் ஏற்படுத்திய பின் போன் செய்து என்ன பயன். விலங்குகளை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதா.
வனவர்: மாவட்ட வன அலுவலரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
டி.ஆர்.ஓ.,: ஏற்கனவே வறட்சியால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வன விலங்குகளை கட்டுப்படுத்த தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை