கொடைக்கானல் உருவானது எப்படி: இன்று கொடைக்கானல் மலர்கண்காட்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் உருவானது எப்படி: இன்று கொடைக்கானல் மலர்கண்காட்சி

Added : மே 20, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 கொடைக்கானல் உருவானது எப்படி: இன்று கொடைக்கானல் மலர்கண்காட்சி

இந்தியாவில் காலுான்றிய ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தனது ராணுவ வீரர்களுக்கு ஏற்ற மலைப்புகலிடங்களை இந்தியாவில் அனைத்து பகுதி களிலும் உருவாக்க திட்டமிட்டது. சமவெளி பகுதியில் கோடை வெப்பத்திலிருந்து காப்பது, ஆங்கிலேய மேல்தட்டு வர்க்கத்தினரின் வாழ்வியலுக்கு ஏற்றது, ஐரோப்பியர்கள் அதிகளவில் இந்தியாவில் குடியேற ஏற்றதொரு சூழலை உருவாக்குவது என்பதற்காகவே இத்திட்டம் உருவானது.

1820 ல் ஆங்கிலேய அரசு சென்னை மாகாணத்தின் ஆட்சி பரப்பை தெற்குப் பகுதியிலும் விரிவு படுத்தியது. இப் பகுதியில் உள்ள 4 பிரதேசங்களில் ( நீலகிரி மலை, ஆனை மலை, ஏலமலை, பழநி மலை) மக்கள் குடியேற ஏற்றசூழல் உள்ள மலையை கண்டறிய லெப்டினன்ட் வார்ட் என்னும் நில அளவையாளர் பழநி மலைக்கு அனுப்பப்பட்டார்.

பெரியகுளத்தில் இருந்து வெள்ள கெவி வழியாக பழநிமலை வந்த அவர், பாம்பார் அருவியின் மேல்பகுதி யில் தங்குவதற்கு கூடாரம் அமைத்து பணியை தொடங்கினார். 1837 வரை நில அளவை அறிக்கை வெளியிடப்படாததால், ஆங்கிலேய அரசு நீலகிரி மலையில் உள்ள உதகமண்டலத்தை ஆங்கில ராணுவத்திற்கு, மலைவாழிடங்களின் தலைமையிடமாக தேர்வு செய்து விரிவாக்கம் செய்தது.

பின்னர் படிப்படியாக ஆங்கிலேயர்கள் கொடைக்கானலில் குடியேற துவங்கினர். அவர்களுக்கான வீடுகளை கட்டினர். ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மரங்கள், பழ மரங்களை தங்களது வீடுகளில் நட்டனர்.

அப்போதைய மாவட்ட ஆட்சியர் 'சர் வேர் லெவின்ஞ்' தனது ஓய்வு காலத்தை கொடைக்கானலில் கழித்தார். அவர் ஜான் டேப் என்பவருடன் இணைந்து வனத்தை சுற்றியுள்ள நீர்பிடிப்புப் பகுதியில் அதிகமாக காணப்படும் ( பாம்பார் பகுதி) நீரூற்றுகளில் இருந்து வழிந்தோடும் நீரை சேமிக்க ஒரு குளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதுவே தற்போதைய கொடைக்கானலின் பிரதான ஏரியாகும்.

1860 ஆம் ஆண்டில்தான் ஆங்கிலேய அரசு கொடைக்கானல் என்ற பெயரை அரசு பதிவேடுகளில் முதன் முறையாக பதிவு செய்தது. கொடைக்கானல் பெயர் காரணம் தெரியவில்லை என்றாலும், கானல் (kanal) என்பதற்கு அடர்ந்த காடு என்ற பொருள் பயன்படுத்தப்படுகிறது.
கொடைக்கானலை நோக்கி மதபோதகர்கள், ஆங்கிலேய அரசின் அதிகாரிகள் அதிகளவில் வந்திறங்கினர். இவர்களோடு இந்திய பணியாளர்களும் வந்தனர்.

பின்னர் படிப்படியாக மக்கள் தொகை அதிகரித்து மலைவாச தலம் பிரபலமானது. முன்பு, சீசன் காலங்களில் மட்டுமே வந்த சுற்றுலாபயணிகள் தற்போது ஆண்டு முழுவதும் நகரையும், ரம்யமான சூழலையும் கண்டு ரசிக்க துவங்கினர்.


கொடைக்கானலில் என்ன பார்க்கலாம்வெள்ளி நீர்வீழ்ச்சி


கொடைக்கானலின் நுழைவு வாயிலாக, சுற்றுலாபயணிகளை வரவேற்கும் விதமாக வெள்ளிநீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சிகளில் வழிந்தோடும் நீரை கண்டு பயணிகள் ஆனந்தமடைகின்றனர். வெளியேறும் உபரி நீர் பல விவசாய நிலங்களுக்கும் பழநியின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகின்றது.


பேரிஜம் ஏரி


வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை காண வனத்துறையினரின் உரிய அனுமதி பெற்று செல்லலாம். வனப்பகுதிகளுக்குள் பாலிதின், மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமையன்று சுற்றுலாபயணிகளுக்கு அனுமதியில்லை. பேரிஜம் ஏரி வனப்பகுதிகளின் உள்ளேயும் சுற்றுலா இடங்கள் நிறைய உண்டு.


கொடைக்கானல் மியூசியம்


இங்கு காட்டு விலங்குகள் பல வகை வண்ணத்துப் பூச்சிகள், பறவைகள், பாம்புகள், பதப்படுத்தப்பட்டு பார்வைக்கு வைத்துள்ளனர். முதுமக்கள் பயன்படுத்திய தாழிகள் மற்றும் பல வகை அரிய பொருட்கள் மியூசியத்தில் உள்ளன.


பசுமை பள்ளத்தாக்கு


பசுமை பள்ளத்தாக்கு பில்லர் ராக் அருகில் உள்ளது. பெரியகுளம் மற்றும் தேனி மற்றும் நகரங்களின் அழகையும் மலைமுகடுகளின் நடுவே உள்ள பசுமையான பகுதிகளையும் இங்கிருந்து காணலாம்.


லா சலேத் தேவாலயம்


லா சலேத்' எனப்படும் கத்தோலிக்க மதத்தினருக்கான துாய சலேத் அன்னை ஆலயம் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. தற்போது நுாறாண்டுக்கும் மேலான பழமையான இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் சென்று பிரார்த்தனை செய்கின்றனர். ஆண்டுதோறும் ஆக., 14, 15 தேதிகளில் திருவிழா விமரிசையாக நடைபெறும்.


பாம்பார் அருவி


வெள்ளகெவி கிராமத்திற்கு செல்லும் வழியில் பாம்பார் அருவி அமைந்துள்ளது. ஆங்காங்கே பாறைகளின் நடுவே வழிந்தோடும் நீரை கண்டு சுற்றுலா பயணிகள் பரவசம் கொள்கின்றனர். வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. லிரில் பால்ஸ் அருவியும் உண்டு.


கொடைக்கானலில் என்ன உள்ளது


கோக்கர்ஸ் வாக்:
---------------------1872 ஆம் ஆண்டில் அரசு பொறியாளரான லெப்டினன்ட் கோக்கர் என்பவர், மலையில் இருந்து சமவெளிப் பகுதியை கண்டு ரசிக்க கொடைக்கானலின் தென்கிழக்குப் பகுதியில் ஒரு நடைபாதையை உருவாக்கினார். அதுவே கோக்கர்ஸ் வாக் எனப்படுகிறது.

கொடைக்கானல் ஏரி: ----------------------மதுரை ஆட்சியர் சர் வேர் லெவின்ஞ் என்பவரால் உருவாக்கப்பட்ட குளமே தற்போது கொடைக்கானல் ஏரியாக உள்ளது.

அப்பர் லேக் வியூ:
----------------------கொடைக்கானலில் அப்சர் வேட்டரி பகுதியில் உள்ள அப்பர் லேக் வியூவின் அழகையும் ஏரியின் தோற்றத்தையும் உயரமான இடங்களில் கண்டு ரசிக்கின்றனர். இங்கு வருவதற்கு சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.

மோயர் பாய்ன்ட்: -------------------மோயர் என்பவரின் நினைவாக இந்த சுற்றுலா இடம் விளங்குகிறது. அப்சர்வேட்டரி பகுதியிலிருந்து பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் உள்ளது.

குணா குகை: 'டெவில்ஸ் கிச்சன்' (பிசாசுகளின் சமையலறை) என்று அழைக்கப்பட்ட சுற்றுலா தலமே, நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படம் சூட்டிங்கிற்கு பின்னர், தற்போது 'குணா குகை' என மாறிவிட்டது.

பில்லர் ராக்:
உயர்ந்தோங்கி நிற்கும் இரண்டு துாண்கள் உள்ள பில்லர் ராக் சுற்றுலா இடங்களையும், அங்கு மலை முகடுகளின் நடுவே சமவெளி பகுதிகளில் தெரியும் தேனி மற்றும் நகரங்களையும் இங்கிருந்து கண்டு ரசிக்கலாம்.

பிரையன்ட் பூங்கா: 1900 ஆம் ஆண்டு ஆங்கிலேய வன அலுவலர் எச்.டி. பிரையன்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர் பெயரால் பிரையன்ட் பூங்கா என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே மாதங்களில் நடைபெறும் மலர்கண்காட்சியை வெளிநாட்டவரும் ஆர்வமுடன் கண்டு களிப்பர். தோட்டக்கலைத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

செட்டியார் பூங்கா: 4.15 ஏக்கர் பரப்பளவில் உள்ள செட்டியார் பூங்கா 1924 ஆம் ஆண்டு கொடைக்கானலில் வசித்த வெங்கடாசலம் செட்டியாரால் தானமாக வழங்கப்பட்டது. அவரது பெயரால் தற்போது அழைக்கப்படுகிறது. குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.

குறிஞ்சியாண்டவர் கோயில்: பழநி தண்டாயுதபாணி கோயிலின் உப கோயிலாக திகழ்கின்றது. ஆன்மிக பக்தர்கள் மட்டுமின்றி கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு வராமல் செல்ல மாட்டார்கள். லீலாவதி என்ற அம்மையாரால் கட்டப்பட்ட குறிஞ்சி செடிகள் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளதால் குறிஞ்சியாண்டவர் என பெயர் வந்தது.

இந்திய வான் இயற்பியல் ஆய்வகம்: அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள இந்திய வான் இயற்பியல் மையத்தை மாணவர்கள் பார்வையிடுகின்றனர். கொடைக்கானல் ஆய்வுக்கூடத்தின் முக்கியப்பணி, சூரியனின் புறப்பரப்பு (போட்டோஸ்பியர்) மற்றும் வாயுமண்டலம் ( குரோமோஸ்பியர்) ஆகியவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதுதான்.


'டால்பின் நோஸ்' பெயர்க்காரணம்


'டால்பின் நோஸ்' : டால்பின் மூக்கை போன்ற தோற்றத்தை கொண்ட பாறையை 'டால்பின் நோஸ்' என்ற பெயர் அழைத்து அப்பகுதியினர் கண்டு ரசிக்கின்றனர். வெள்ளகெவி மற்றும் வட்டக்கானல் பகுதிக்கு செல்லும் வழியில் இப்பகுதிஉள்ளது.தற்போது கிராம பகுதிகளான
பூம்பாறை மற்றும் மன்னவனுார் பகுதிகளில் உள்ள பசுமையான பகுதிகளை கண்டு ரசிக்க சுற்றுலாபயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

1. மகாலெட்சுமி கோயில்
2. பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில்
3. மன்னவனுார் ஆடு மற்றும் முயல் பண்ணை
4. மன்னவனுார் ஏரி ( பரிசல் சவாரி மற்றும் ஈக்கோ டூரிசம் சுற்றுலா)

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pillai Rm - nagapattinam,இந்தியா
20-மே-201718:19:32 IST Report Abuse
Pillai Rm அப்போ இருந்த கம்பி வேளி இல்லாத கொக்கர் வாக்கும் சூசைத் பாயிண்ட் ம் குண குகையும் காணாம போயி ரொம்ப காலம் ஆயிட்டு .....இப்போ பொறவுங்க என்ன பாக்கிரோம் னு தெரியாமலே சுத்திப்புட்டு கண்டா எடத்துல ஊரின் போயி அசிங்கம் பண்ணி புட்டு போயிடறாங்க அம்புட்டு தேன்
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
20-மே-201711:27:51 IST Report Abuse
JeevaKiran அருமையான தகவல்கள். டூரிஸ்ட்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை