'மாற்றுத்திறனாளி அல்ல நீ மாற்றும் திறனாளி':ஜக்குவை இயக்கும் கலாம் வார்த்தைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மாற்றுத்திறனாளி அல்ல நீ மாற்றும் திறனாளி':ஜக்குவை இயக்கும் கலாம் வார்த்தைகள்

Added : மே 20, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 'மாற்றுத்திறனாளி அல்ல நீ மாற்றும் திறனாளி':ஜக்குவை இயக்கும் கலாம் வார்த்தைகள்

நம்மில் பலரும், காய்ச்சல் வந்தாலே கை, கால்களை அசைப்பதில்லை. ஆனால், உடல் அசையாதிருக்கும் நிலையிலும், எண்ணத்தின் எழுச்சி வேகத்தால் இணையத்தில் ஊடாடி, ஆச்சரியங்களை நிகழ்த்துகிறார், அந்த 24 வயது குழந்தை. அவர், 'ஜக்கு' என்று செல்லமாய் அழைக்கப்படும் மாற்றுத்திறனாளி, வெ.கி.ஜெகதீஷ்.

கோவை, காட்டூரைச் சேர்ந்த இவரை, 6 மாதக்குழந்தைப் பருவத்தில் அநியாயமாய் தாக்கியது, 'டெட்ராப்ளேஜியா' என்ற நோய். எழுந்து நடக்கவோ, ஓடவோ முடியாத நிலை. ஒரு மணி நேரம் கூட அமர்ந்திருக்க இயலாது. 3 வயது சிறுவனாக இருந்தபோது சிறுவர்களால் தள்ளிவிடப்பட, அவரது பற்கள் நொறுங்கின. 7 வயதாக இருந்தபோது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல், அவருக்கு ஆப்பரேஷன் செய்த மருத்துவர் அகால மரணமடைய, சிகிச்சை விபரங்கள் மற்றவருக்கு தெரியாமல், பாதிப்பு கூடுதல் ஆனது.

கோவை, 'அம்ரித்' சிறப்பு பள்ளியில், 10ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த ஜக்கு, சொந்த முயற்சியால் ஆங்கிலத்தையும் ஆர்வமுடன் கற்றார். இணைய உலகில் உலாவர ஆரம்பித்தார். 'வெப் பேஜ் டெவலப்மென்ட், கோரல் டிரா, போட்டோ ஷாப்' நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்தார்.
இன்று, தொழில்நுட்ப நேர்த்தியால் வலைத்தளம், சமூக வலைத்தளங்களில் சிறகடித்துப் பறக்கிறார். ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ராபின் ஷர்மா, நம்மாழ்வார், ஜெயமோகன், எஸ்.ரா., என இடைவிடாத வாசிப்பு, தன்னை எழுத்தாளராக்கியது என்கிறார், ஜக்கு.

இணையம் மூலம் கண்தான அமைப்புகள், குருதிக்கொடை, உடல் உறுப்பு தானம், குழந்தைகள் மேம்பாடு போன்ற சேவைகளில் ஈடுபடத் துவங்கினார். இது ஏராளமான நண்பர்களை கொடுத்தது. சென்னை நகரம் வெள்ளத்தால் தத்தளித்தபோது, 'சி பார் தமிழ்நாடு' என்ற 'ஹேஷ்டேக்' உருவாக்கி, 70க்கும் மேற்பட்ட லாரிகளில், இங்கிருந்து உணவும் மருந்தும் சென்னை செல்ல உதவினார்.

மாற்றுத்திறனாளிகள் மனம் தளரக்கூடாதென, உளவியல் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். கடந்த, 2016ல், கோவை, இந்திய தொழில் வர்த்தகசபை, ஜக்குவுக்கு, 'அன்சங் ஹீரோ' எனும் விருதை வழங்கி கவுரவித்தது.இணையத்தின் மூலமே, மதுரா டிராவல்ஸ் என்ற சென்னை நிறுவனத்தில் வேலைவாய்ப்பும் பெற்று சுற்றுலா, விமானப் போக்குவரத்து, ரிசார்ட் வசதிகள் குறித்த தகவல்களை 'அப்டேட்' செய்து மாதச்சம்பளம் பெறும் ஊழியராகவும் தன்னை
உயர்த்திக்கொண்டார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை அவரது, 'இணையமும் இவனும்' என்ற நுால், கோவை விஜய் பார்க்கினில் வெளியிடப்படுகிறது. அந்த நுாலின் அட்டைப்படம் கூட, ஜக்குவின் கைவண்ணமே. பாசாங்கற்ற அன்பும், இடைவிடாத உழைப்புமே தன்னை நிலை நிறுத்தும் என்ற நம்பிக்கை கொண்டவர் ஜக்கு.

ஒருமுறை கோவை வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், 'நீ மாற்றுத்திறனாளி அல்ல; மாற்றும் திறனாளி' என்று பாராட்டியதை இன்றும் ஜீவவார்த்தையாக நினைவு கூர்கிறார்.தந்தை வெங்கட்ராமன், தாய் கிரிஜாவின் அக்கறையில் சுப்புலட்சுமி பாட்டியின் கனிவான பராமரிப்பில், எழுச்சியும் அன்புமாய் உழைக்கும் ஜக்கு, நமக்கெல்லாம் ஒரு ஆச்சரியமூட்டும் ஆளுமை என்றால், அதில் மிகையேதும் இல்லை. ஜக்குவைப் போன்றோர் தான், வாழ்வின் ஜீவிதத்தை வாடிவிடாமல் காத்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ranjani -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-201702:39:10 IST Report Abuse
Ranjani எழுச்சி மிக்க திறமையான மனிதர். இன்னமும் வளர்ந்து வாழ வாழ்த்துக்கள் 👍
Rate this:
Share this comment
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
20-மே-201722:09:50 IST Report Abuse
Mannai Radha Krishnan 1985 ம் வருடம் திருச்சியில் உள்ள வங்கியில் பணியில் இருந்தேன். ஒரு வயதான மனிதர், டிப்-டாப் ஆக மிலிட்டரி டிரஸ், நிறைய மெடல்கள் குத்தி இருந்தது. கையில் ராட்டையுடன் மூவர்ண கொடி. ஒன்றும் பேசவில்லை. நான் கேட்ட கேள்விக்கு அவர் நேஷனல் Army (சுபாஷ் சந்திரா போஸ்) என்று தெரிந்து. பையில் கை விட்டேன் 5 ரூபாய் தான் இருந்தது. அதை அவரிடம் கொடுத்துவிட்டு, பக்கத்தில் இருந்தவரிடம் பத்து ரூபாய் வாங்கி கொடுத்தேன். அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. வயது அப்போவே 75 -80 இருக்கும். அதுதான் SELF RESPECT WITH PATRIATISAM. கேட்டதில் அவர் வருடம் ஒரு முறை வருவாராம்.
Rate this:
Share this comment
Cancel
sagodhary - Paris,பிரான்ஸ்
20-மே-201719:18:00 IST Report Abuse
sagodhary உங்களுடைய விடாமுயற்சி மனித இனத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு, எங்களுடைய வாழ்த்துக்கள்,நீங்கள் வாழ்க்கையில் மென்மெலும் உயர்ந்திட வல்ல இறைவனை வேண்டுகிறோம் wish you all the best
Rate this:
Share this comment
Cancel
Subramanian -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-201718:04:42 IST Report Abuse
Subramanian வாழ்த்துக்கள்.எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா உதவிகளையும் அருள வேண்டுகின்றேன். உங்கள் அர்பணிப்பிற்க்கு தலை வணங்குகின்றேன்
Rate this:
Share this comment
Cancel
MaRan - chennai,இந்தியா
20-மே-201713:04:40 IST Report Abuse
MaRan ஜக்கு உங்களை போன்றோருக்கு நீங்கள் இன்னும் அதிகமாக உதவ வேண்டும்,, உங்களுக்கு கிடைத்த வசதிகள் வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை,, அவர்கள் அவமதிக்கப்படுவார்கள்,,, ஏங்குவார்கள்,, எனவே இணையத்தில் ஒரு தளம் உருவாக்கி இயற்கையால் முடக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு உதவிகள் சென்று சேர்வதை உறுதிப்படுத்துங்கள், இறைவன் உங்களுடன், ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
viyash -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-201708:45:29 IST Report Abuse
viyash Sir, Your the best example for human life
Rate this:
Share this comment
Cancel
venkatesh -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-201708:31:38 IST Report Abuse
venkatesh வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Yo Joe - Salem,பெல்ஜியம்
20-மே-201708:16:44 IST Report Abuse
Yo Joe Sometimes God is among us and watch us over... God, are you Jaggu?
Rate this:
Share this comment
Cancel
ManoShree -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-201706:35:14 IST Report Abuse
ManoShree iraiva umakku nandri.... valthukkal...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை