திருப்பூர் வட்டாரத்தில், 25 மி.மீ., பதிவு...மகிழ்ச்சி மழை!வெயில் தாக்கம் தணிந்ததால் நிம்மதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம், பலத்த காற்று, இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.அக்னி நட்சத்திர வெயில், நாளுக்கு நாள் சுட்டெரிப்பதால், பகல் நேரங்களில், ரோட்டில் நடமாட மக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பலத்த காற்று, இடி, மின்னலுடன் பல இடங்களில் கன மழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில், சராசரியாக 12.77 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது.
திருப்பூர் நகரில், கடந்த மூன்று மாதமாக பெரிய அளவிலான மழை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் கன மழை பெய்தது. ரோடுகளில், கழிவு நீருடன், மழை நீரும் சேர்ந்து, வெள்ள நீர் ரோட்டில் ஓடியது.



இதனால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பலத்த காற்றுக்கு, பல இடங்களில் மரங்கள் கீழே விழுந்து, மின் கம்பங்கள், கம்பிகள் அறுந்து விழுந்ததால், சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும், கடந்த மூன்று மாதமாக, அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், திருப்பூர் நகர பகுதியில் போதிய அளவு மழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது.


இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கன மழையும், தொடர்ந்து தூறல் மழையும் பெய்தது. இம்மழை, 25 மி.மீட்டராக பதிவானது. கடந்த மூன்று மாதத்தில், இதுவே அதிக பட்ச மழை என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த மழை, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்து, நிலங்களையும், மக்கள் மனங்களையும் குளிர்வித்தது. கிராம பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், பல மாதங்களுக்கு பிறகு மழை நீர் தேங்கியது. இதனால், விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சிஅடைந்தனர்.



நேற்று முன்தினம்



முதல் நேற்று காலை வரை, அவிநாசியில், 11 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. திருப்பூரில், 25 மி.மீ.,; உடுமலையில், 1.4 மி.மீ.,; பல்லடம், 21 மி.மீ.,; தாராபுரம், 12 மி.மீ.,; காங்கயம், 2 மி.மீ.,; மூலனூர், 17 மி.மீ.,; பொங்கலூர், 18 மி.மீ.,; உப்பாறு, 28 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக உப்பாறு மற்றும் திருப்பூர் பகுதிகளில், மழை பெய்துள்ளது. ஆனால், உடுமலையில் மழை இல்லை.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்