பதவி விலகுகிறார் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ| Dinamalar

பதவி விலகுகிறார் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ

Added : மே 20, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பதவி விலகல், ஜப்பான், மன்னர், அகிஹிட்டோ

டோக்கியோ:83 வயதான ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார். இது தொடர்பான மசோதாவுக்கு, ஜப்பான் மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கியது.ஜப்பான் மன்னராக அகிஹிட்டோ (வயது 83) உள்ளார். இவர் அந்த நாட்டின் 125-வது மன்னர்.கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரை ஆற்றினார். அப்போது அவர் வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார்.ஒரு கட்டத்தில் தனது பொறுப்புகளை மற்றொருவரிடம் ஒப்படைப்பதுதான் புத்திசாலித்தனமானது என அவர் குறிப்பிட்டார்.


புதிய சரித்திரம்

ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை. அங்கு கடைசியாக 1817-ம் ஆண்டு, கொகக்கு என்ற மன்னர்தான் பதவி விலகி உள்ளார். அதன்பின்னர் யாரும் பதவி விலகியது இல்லை.அந்த வகையில், தற்போதைய ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகி புதிய சரித்திரம் படைக்கிறார்.

பதவி விலகுகிறார் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ

மன்னர் பதவி விலகுகிற நிலையில், மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அந்த நாட்டு மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.ஜப்பான் மன்னர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
20-மே-201717:50:45 IST Report Abuse
Balaji பதவியை இதுபோன்று துச்சமாக எண்ணுபவர்கள் தான் மக்களுக்கு உண்மையாக இருப்பார்கள் மற்றும் மக்கள் பணியாற்றுவார்கள்........ நமது தேசத்தில் இதுபோன்ற நபர்களை காணுவது அரிதிலும் அரிது..........
Rate this:
Share this comment
Cancel
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
20-மே-201715:34:13 IST Report Abuse
நெல்லை மணி, ஜப்பான்காரர்கள் நாட்டுப்பற்று மிக்கவர்கள். தான் மன்னராக இருந்துகொண்டு தன் உடல் நலக்குறைவு காரணமாக நாட்டு மக்களுக்கு நம்மை செய்ய முடியவில்லையே என்றதும் பதவி விலக விருப்பம் தெரிவித்தார் என்றால் பெரியமானதுதான். ஆனால் நம் தமிழ் நாட்டிலோ எழுந்து நடக்கமுடியாவிட்டாலும் வீல் சேரில் இருந்து கொண்டும் நோயினால் பாதிக்கப்பட்டு கட்டிலில் படுத்துக்கொண்டும் ஒரு வார்த்தையையும் ஒழுங்காக பேசமுடியாத அளவுக்கு உடலில் நோய் இருந்தாலும் கடைசி வரை பதவியை கட்டி பிடித்துக்கொண்டு நாடு எப்படி போனால் என்ன ? என்றுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை ஆதரிப்பதற்கு என்று ஒரு கூட்டம் வேறு. என்ன செய்வது?
Rate this:
Share this comment
Cancel
தமிழ் - ஈரோடு,இந்தியா
20-மே-201712:57:15 IST Report Abuse
தமிழ் இந்த பண்பாடு நம் நாட்டிற்கு எப்பொழுது வரும்?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
20-மே-201708:21:57 IST Report Abuse
K.Sugavanam அடுத்த மன்னருக்கு வாழ்த்துக்கள்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201707:49:59 IST Report Abuse
Srinivasan Kannaiya அங்கே தேவலாம்...இங்கே சாவற வரை பதவியில் இருந்தால்தான் ராணுவ மரியாதையோடு சவ அடக்கம் நடக்கும் என்பதால் பதவியை புளியம் கொம்பை பிடித்துக் கொண்டு இருப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
20-மே-201707:10:22 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே உங்களின் நேர்மை/நாணயத்தை கண்டு வியக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Shiva Kumar - Chennai,இந்தியா
20-மே-201705:40:59 IST Report Abuse
Shiva Kumar எங்க ஊரு வந்து ட்ரைனிங் எடுத்துகொங்கா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை