ஜார்கண்டில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி| Dinamalar

ஜார்கண்டில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி

Added : மே 20, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ஜார்கண்ட், துப்பாக்கிச்சூடு, 4 பேர், பலி

கார்வா:ஜார்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் உள்ள பிப்ரி ஜத்புரா பாலு காட் என்ற இடத்தில் மணல் ஒப்பந்ததாரர் நானக் யாதவ் என்பவர் லாரிகள் மூலம் மணல் எடுத்துக் கொண்டிருந்தார்.இதை அறிந்த கிராம மக்கள் அங்கு சென்று மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணல் அள்ளும் ஊழியர்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் கோபமடைந்த ஊழியர்கள் பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில், உதய் யாதவ் (வயது 55) என்ற முதியவரும், அவரது 2 மகன்களும் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊழியர்களை தாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்த 15 லாரிகள், 3 மணல் அள்ளும் எந்திரங்கள் மற்றும் ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றுக்கு தீ வைத்தனர். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.அதனை தொடர்ந்து பொதுமக்கள் மணல் ஒப்பந்ததாரர் நானக் யாதவ் வீட்டிற்கு சென்று, வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடினர். பின்னர் அந்த வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்த மணல் ஒப்பந்ததாரரின் ஊழியர் ஒருவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
20-மே-201711:46:07 IST Report Abuse
Needhiyin Pakkam Nil நானக் யாதவ் என்ன ஜார்கன் நாட்டு மன்னரா இல்லை நில பிரபு வா அங்கு மக்களாட்சி தானே நடக்கிறது..? ஊழியர்களிடம் எப்படி துப்பாக்கி வந்தது, துப்பாக்கி வைத்து கொள்ளும் அதிகாரம் அவர்களுக்கு யார் கொடுத்தது நல்ல விசாரிங்க டா துப்பாக்கி தொழிசாலை கூட வைத்திருப்பார்கள், ஆகா வட இந்தியாவில் மக்களை அடிமைப்படுத்தும் ஜமீன்தார் மாபியா சிஸ்டம் இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது...........
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
20-மே-201709:40:13 IST Report Abuse
Nalam Virumbi இந்தமாதிரி திருட்டுத்தனமாக மணல் அள்ளும் மாபியாக்களை பொதுமக்களே தண்டனை கொடுக்க வேண்டும். அரசு ஊழல் செய்யும் போது சட்டத்தை கையில் எடுப்பது தவறில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை