2018ல்அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி: மத்திய அரசு தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

2018ல்அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி: மத்திய அரசு தகவல்

Added : மே 20, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
2018ல்கிராமங்கள், மின் வசதி, மத்திய அரசு, தகவல்

புதுடில்லி:அடுத்த ஆண்டுக்குள் (2018) அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி செய்து தரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.கிராமப்புறங்களில் மின்வசதி, மேம்பாடு, மின்திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்ற ஆன்லைன் விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விவாதம் சென்னையிலுள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில்(பிஐபி) நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதையொட்டி மத்திய மின்துறை ஓர் அறிக்கை வெளியிட்டது.


அந்த அறிக்கை விவரம்:


2018ல் அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி

கடந்த 2014 ஆண்டிலிருந்து தீன்தயாள் உபாத்யாயா கிராம மின் வசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, நாட்டிலுள்ள அனைத்து கிராமப்புறங்களிலும் 2018 ஆண்டுக்குள் மின்வசதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 3 ஆண்டுகளில் 18,542 கிராமங்களில் 13,469 கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டுள்ளது. அவ்வகையில், இந்த மின்வசதி திட்டத்தின் மூலம் 5 மடங்கு அதிகமாக கிராமப்புற பகுதிகளில் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அதுபோல், மாநிலங்களுக்கு இருமடங்காக, ரூ.7965 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.42,553 கோடி மதிப்பிலான மின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதுபோல், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 2.56 கோடி குடும்பங்கள் இலவச மின்வசதி பெற்று பயனடைந்துள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
20-மே-201716:03:39 IST Report Abuse
தமிழர்நீதி ஆட்சிக்கு வந்து மூணு ஆண்டாகி ,இப்போதுதான் இருட்டு தெரியுது பிஜேபி க்கு .
Rate this:
Share this comment
Cancel
வேந்தன் - chennai,இந்தியா
20-மே-201711:29:15 IST Report Abuse
வேந்தன் தமிழ்நாட்டில் 1972 இந்த இலக்கை அடைந்து விட்டது. இதுவே தேசிக்கட்சிக்கும் திராவிட கட்சிக்கும் உள்ள நிர்வாக திறமை மற்றும் வித்தியாசம். MGR 1985ல் டெல்லியில் முதலமைச்சர் மாநாட்டில் கூறினார். அம்மா வந்த பின் தான் தமிழ்நாடு நாசமாப்போச்சு.
Rate this:
Share this comment
N.K - bochum,ஜெர்மனி
20-மே-201714:48:25 IST Report Abuse
N.Kதமிழ்நாட்டின் பரப்பளவிற்கும், மொத்த நாட்டின் பரப்பளவிற்கும், மக்கள்தொகைக்கு வித்தியாசம் இருக்கிறதல்லவா ?...
Rate this:
Share this comment
Cancel
unmaiyai solren - chennai,இந்தியா
20-மே-201711:02:28 IST Report Abuse
unmaiyai solren அனைத்து கிராமங்களுக்குமா??? மிகவும் மகிழ்ச்சியான செய்தி.ஆனா எப்போ ....2018 லா? 3018 லா? சரியா சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் - ஈரோடு,இந்தியா
20-மே-201710:16:11 IST Report Abuse
தமிழ் பாராட்டப்பட வேண்டிய விஷயம். 2018 -க்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்தால் சாதனை தான். சூரிய ஒளி மின்சாரத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
20-மே-201708:52:39 IST Report Abuse
Jaya Prakash முதல்லே இந்த டாஸ்மாக்களை மூடனும்..... டண்டணக்கா டன் அறிக்கை எல்லாம் டன் கணக்கில் அசால்ட்டா வருது......
Rate this:
Share this comment
Cancel
Rahim - Jubail,சவுதி அரேபியா
20-மே-201708:25:23 IST Report Abuse
Rahim மின் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுவிட்டது என சில நாட்களுக்கு முன்னாள் செய்தி போட்டார்களே அவை எல்லாம் டுபாக்கூர் செய்திதானா ?
Rate this:
Share this comment
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
20-மே-201711:35:36 IST Report Abuse
Kuppuswamykesavanஇது மின் விநியோகத்தை குறிக்கும் தகவலாகும். இது உண்மையாக நிறைவேறினால், நாம் பாராட்டனும் பிரதமர் மோடி அவர்களை....
Rate this:
Share this comment
20-மே-201711:44:49 IST Report Abuse
தேசநேசன்WE HAVE ENOUGH POWER GENERATION CAPACITY. ONLY PROBLEM IS POWER DISTRIBUTION..WHICH IS A STATE SUBJECT. IT HAS NOTHING TO DO WITH NATIONWIDE POWER SELF SUFFICIENCY . STOP BLAMING THE CENTRAL GOVERNMENT GOR EVERYTHING...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மே-201707:46:49 IST Report Abuse
Srinivasan Kannaiya 2018ல்அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி:இதையே ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து ஒன்றில் இல் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள்... ஆனால் செய்த பாடில்லை...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-மே-201707:44:45 IST Report Abuse
Kasimani Baskaran அடிப்படை வசதிகள் குக்கிராமங்களை கூட சென்றடையமுடிந்தால் அது மிகப்பெரிய சாதனை... தண்ணீர், மின்சாரம், சுகாதாரம் மற்றும் வீடுதோறும் கழிப்பறை போன்றவை சுகாதாரமான இந்தியாவுக்கு மிக மிக அவசியம்...
Rate this:
Share this comment
Cancel
vedru.varada - vannarapettai.. ,பெலாரஸ்
20-மே-201706:40:34 IST Report Abuse
vedru.varada அப்படியா ??? சொல்லவேயில்லே? தீன்தயாள் உபாத்யாயா எப்போ தமிழ் நாட்டுக்கு வந்தார் அல்லது வருவார்? அடுத்த வருடமா அல்லது அதுக்கு அடுத்த வருடமா ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை