கோவை நகை பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை| Dinamalar

கோவை நகை பட்டறையில் 1 கிலோ தங்கம் கொள்ளை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை, கோவை நகை பட்டறையில், ஊழியர் மீது மிளகாய் பொடி துாவி, முகமூடி கும்பல், ஒரு கிலோ தங்கத்தை கொள்ளையடித்து தப்பியது.
கோவையில், நகை பட்டறை வைத்து நடத்தி வருபவர் குணசேகரன், 53. இங்கு நாகராஜ், 27, சரவணகுமார், 26, வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் இருவரும் பட்டறையில் தங்கி, நகை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, சரவணகுமார் டீ வாங்கி வர வெளியே சென்றார். பட்டறையில் நாகராஜ் மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது, முகமூடி அணிந்த நான்கு பேர் திடீரென உள்ளே புகுந்தனர். அவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்த, நாகராஜ் சப்தம் போட்டார். உடனே, அவரது கண்ணில் அந்த கும்பல் மிளகாய் பொடி துாவியது. பின், ஊழியரை சரமாரியாக தாக்கி கத்தியால் முதுகில் குத்தினர். தாக்குதலில் காயமடைந்த நாகராஜ், மயங்கி கீழே விழுந்தார்.
பின், பட்டறையில் பல்வேறு வடிவங்களில் செய்து வைக்கப்பட்டிருந்த, ஒரு கிலோ எடையிலான தங்க செயின்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பி சென்றது. சிறிது நேரம் கழித்து, சரவணகுமார் திரும்பியபோது, நாகராஜ் மயங்கி கிடப்பதையும், நகைகள் மாயமானதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளை கும்பலை பிடிக்க, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டறை அருகே உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர் முகம் பதிவாகி இருக்கிறதா என, போலீசார் விசாரித்து வருகின்றனர். காயமடைந்த நாகராஜ், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.