பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு:பள்ளி வாகனங்கள் 7 நிராகரிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மீனம்பாக்கம்:மாணவ, மாணவியர் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ததில், பாதுகாப்பு குறைபாடு உள்ள வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருதி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு குழுக்கள் மூலம் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று, 79 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவசர வழி, வேக கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பான், முதலுதவி பெட்டி, உயரமான படிக்கட்டு போன்ற அம்சங்களை குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரி சுதாகர் தலைமையினால குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில், 7 வாகனங்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றை உரிய சீரமைப்புக்கு பின், மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. வாகன விபத்து ஏற்பட்டால் தீயணைப்பான் மூலம் எப்படி அணைப்பது என, பள்ளி வாகன ஓட்டுனர்கள் மத்தியில்ஒத்திகை நடத்தப்பட்டன.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh - Chennai,இந்தியா
21-மே-201711:29:17 IST Report Abuse
Ganesh நீங்க சொல்ற இந்த அனைத்து சூப்பர் டீலக்ஸ் வசதிகளும் அரசு பேருந்துகளில் இருக்குதா? எனக்கு தெரிஞ்சி 70% பள்ளி மாணவர்கள் பயணம் செய்யுறது அரசு பேருந்துகளில் தான் அதுவும் மாணவிகள் கூட படிகளில் தொங்கி செல்வதை பார்க்கமுடிகிறது. தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து ஒரு சிறுமி ஓட்டை வழியாக விழுந்ததற்கு நடவடிக்கை எடுக்கும் அரசு, சமீபத்தில் ஒரு 40 வயது மதிக்கத்தக்க தாய் அரசு பேருந்திலிருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்த காட்சியை அனைவரும் பார்த்தோமே, இதில் இருந்து என்ன தெரிகிறது? தனியாரை விட அரசிடம் தான் மிகப்பெரிய ஓட்டை இருக்கிறது என்று தெரிகிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்