நியூ பிரின்ஸ் பள்ளி தொடர் சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நியூ பிரின்ஸ் பள்ளி தொடர் சாதனை

Added : மே 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:ஆதம்பாக்கம் மற்றும் உள்ளகரத்தில் அமைந்துள்ள, நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
உள்ளகரம், நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், இந்தாண்டு, ௧௦ம் வகுப்பு பொது தேர்வில் தேர்வு எழுதிய, ௧௪௨ மாணவர்களும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து இந்தாண்டும் சாதனை புரிந்துள்ளனர்.ஆர்.அபிஷேக், ௪௯௩ மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், டி.ஜெயஸ்ரீ, ௪௯௦ பெற்று இரண்டாம் இடத்தையும், வி.அபராஜித், ஆர்.அர்லின் பலிடா, டி.சவுந்தர்யா ஆகியோர், ௪௮௮ மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
தேர்வு எழுதிய, ௧௪௨ மாணவர்களில், சமூக அறிவியல் பாடத்தில் ஏழு மாணவர்களும், கணிதப் பாடத்தில் ஐந்து மாணவர்களும், அறிவியல் பாடத்தில் இரு மாணவர்களும், ௧௦௦க்கு, ௧௦௦ மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
ஆதம்பாக்கம்
ஆதம்பாக்கம், நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ௧௦ம் வகுப்பு தேர்வு எழுதிய, ௧௭௦ மாணவர்களும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இந்தாண்டும் சாதனை புரிந்துள்ளனர். பி.ரூபேஷ் ராஜன் மற்றும் ஆர்.டில்லி ராணி என்ற மாணவர்கள், ௪௯௨ மதிப்பெண் பெற்று, முதலிடத்தை பகிர்ந்து உள்ளனர்.
என்.தர்ஷினி என்ற மாணவி, ௪௯௧ மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், எம்.சுவாதி பிரியா, ௪௯௦ மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.தேர்வு எழுதிய, ௧௭௦ மாணவர்களில் சமூக அறிவியல் பாடத்தில், ௧௭ மாணவர்களும், கணிதப் பாடத்தில், ஒன்பது மாணவர்களும், அறிவியல் பாடத்தில் ஆறு மாணவர்களும், ௧௦௦க்கு, ௧௦௦ மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.இதில், ௪௯௦ மதிப்பெண்களுக்கு மேல் நான்கு மாணவர்களும், ௪௭௦ மதிப்பெண்களுக்கு மேல், ௩௦ மாணவர்களும் பெற்றுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
janibh -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-201700:16:55 IST Report Abuse
janibh இந்த பள்ளிகள் எல்லாம்அரசு பள்ளிகளுக்கு ஈடாகா ! பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண் எடுத்தவரை மட்டுமே admit செய்து பண்ணரண்டாம் வகுப்பில் result கொடுப்பது பெரிய விஷயமா! சராசரி மாணவரை சாதிக்கும் மாணவராக மாற்றும் அரசு பள்ளிகளின் கடின உழைப்புக்கு இந்த பள்ளிகள் எல்லாம் ஈடாகுமா!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை