மருத்துவமனை கட்டுமான விபத்து இரண்டு பொறியாளர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனை கட்டுமான விபத்து இரண்டு பொறியாளர்கள் கைது

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிண்டி:கட்டுமான பணியின் போது, 'ஹாலோபிளாக்' கற்கள் விழுந்து இரண்டு பேர் பலியான சம்பவத்தில், கட்டுமான பொறியாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.கிண்டி, சின்னமலையில் எட்டு மாடி கொண்ட தனியார் மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு, ஒடிசாவைச் சேர்ந்த, 60 பேர் பணி புரிகின்றனர்.
நேற்று முன்தினம், ஆறாவது மாடியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்த போது, 'ஹாலோபிளாக்' கற்கள், தரைத்தளத்தில் பணி செய்து கொண்டிருந்த மூன்று பேர் மீது விழுந்தன.இதில், ஒடிஷாவைச் சேர்ந்த சதாசிவா குட்ருகா, 19, பிருண்டாபன் குட்ருகா, 24, ஆகியோர் பலியாகினர். பாதுகாப்பு மேற்பார்வையாளர்பாஸ்கர், 30, என்பவருக்கு கால் முறிந்தது.இதுகுறித்த விசாரணையில், பாதுகாப்பு கட்டமைப்புகள் செய்யாததால் விபத்து நடந்தது தெரியவந்தது.இதையடுத்து, கட்டட பாதுகாப்பு பொறியாளரான, கொளத்துாரை சேர்ந்த லோகேஷ், 42; கட்டுமான உதவி பொறியாளரான, ராமாபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ், 22, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை