மொபைல் திருட்டு: பெயின்டர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் திருட்டு: பெயின்டர் கைது

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கண்ணகி நகர்:நடந்து செல்வோரிடம், 30க்கும் மேற்பட்ட மொபைல் போன்களை பறித்த பெயின்டரை போலீசார் கைது செய்தனர்.எழும்பூர், ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த சிவா, 23; பெயின்டர். நடந்து செல்வோரிடம் மொபைல் போன்களை பறிப்பதில் கைதேர்ந்தவன். வேலை இல்லாத நாட்களில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடுவான்.
ஒரு மாதத்தில், துரைப்பாக்கம், பெரியமேடு, சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து செல்வோரிடம், 30க்கும் மேற்பட்ட மொபைல் போன்களை பறித்துள்ளான்.கண்ணகி நகர் போலீசார், நேற்று முன்தினம், சிவாவை கைது செய்தனர். அவனிடமிருந்து, 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, ஏழு மொபைல் போன்கள், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை