நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் இருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் இருவர் பலி

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மாதவரம்:நள்ளிரவில், நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் இருவர் பலியாகினர்.சென்னை மாதவரம் உடையார் தோட்டம் லாரன்ஸ் என்கிற குமார், 28; தனியார் நிறுவன ஆம்புலன்ஸ் ஓட்டுனர். அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் செல்வகுமார், 28; தொழிலாளி.இருவரும் நேற்று மாலை, மற்றொரு நண்பரின் திருமண நாள் விழா விருந்தில் கலந்து கொண்டனர். இரவு, 11:30 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது, மாதவரம் - ஜி.என்.டி., சாலையை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த சரக்கு பெட்டக லாரி மீது அவர்களது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமார், சம்பவ இடத்தில் பலியானார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வகுமார், நேற்று அதிகாலை, 1:20 மணியளவில் இறந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை