பணியில் சேர்ந்த அடுத்த நாளே பணத்துடன் மறையும் ஆசாமி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணியில் சேர்ந்த அடுத்த நாளே பணத்துடன் மறையும் ஆசாமி கைது

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ராமாபுரம்:ராமாபுரத்தில், பணிக்கு சேர்ந்த அடுத்த நாளே, இருசக்கர வாகனம் மற்றும் பணத்துடன் தப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.ராமாபுரம், கே.பி.நகரை சேர்ந்தவர் சுரேஷ், 40; அதே பகுதியில், சக்தி முருகன் ஏஜன்சி என்ற பெயின்ட் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார்.
ரகசிய கண்காணிப்பு:இவர் கடையில், சில நாட்களுக்கு முன், அம்பத்துாரை சேர்ந்த சற்குருநாதன், 50, பணிக்கு சேர்ந்தார். பணிக்கு சேரும் போது ஆதார் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டையின் நகல் அளித்துள்ளார்.பணிக்கு சேர்ந்த அடுத்த நாள், நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் மற்ற கடைகளில் இருந்து வசூல் செய்யப்பட்ட, 25 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தப்பிவிட்டான்; அவனது மொபைலில் தொடர்பு கொண்டும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அவனது அடையாள அட்டையில் இருந்த முகவரியில் விசாரித்த போது, 3 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து காலி செய்ததும் தெரிந்தது.
இந்நிலையில், ஊரப்பாக்கத்தில் உள்ள அரிசி கடையில், பணிக்கு சேர்ந்த அடுத்த நாள், இருசக்கர வாகனம் மற்றும் 25 ஆயிரம் ரூபாயுடன் ஒருவன் தலைமறைவானது குறித்து புகார் பதிவானது. அவனது ரேஷன் கார்டு நகலை வைத்து போலீசார் விசாரித்தனர்.பின், அவன் அரிசி வாங்க வரும் வரை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், அவனது மகள் ரேஷன் கடைக்கு வந்தார். அவரை பின் தொடர்ந்து சென்ற போலீசார், வீட்டிலிருந்த சற்குருநாதனை மடக்கி பிடித்தனர்.
ரூ.25 ஆயிரம் பறிமுதல்
விசாரணையில், இவன், செய்தித் தாள்களில் வரும் விளம்பரத்தை பார்த்து பணிக்கு சேர்ந்து, அடுத்த நாளே பணத்துடன் தப்பி விடுவது தெரிந்தது. அவனை கைது செய்த போலீசார், இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் 25 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை