கணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் போராட்டம்

Added : மே 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

செய்யூர்:பதிவுத் திருமணம் செய்து கொண்ட காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் கணவன் வீட்டின் முன் போராட்டம் நடத்தினார்.சோத்துப்பாக்கம், பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மகள் துர்காதேவி, 22. இவரும், செய்யூர் பஜார் வீதியைச் சேர்ந்த ராஜாராமன், 27, என்பவரும், பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சிறு வயதில் இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்ததால், பள்ளிப் பருவத்திலிருந்தே, காதலித்து வந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 4ல், திருவள்ளூர் மாவட்ட சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக துர்காதேவி தெரிவிக்கிறார்.
ஆனால், அதன் பின், பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக ராஜாராமன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கான நிச்சய தாம்பூல நிகழ்ச்சி நடந்த செய்தி துர்காதேவிக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து நியாயம் கேட்க செய்யூரிலுள்ள ராஜாராமன் வீட்டிற்கு நேற்று துர்காதேவி தன் பெற்றோருடன் சென்றார்.
சரியான பதில் கிடைக்காததால், அவரது வீட்டு வாசல் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். முன்னதாக மேல்மருவத்துார் மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து, துர்காதேவி புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அவர் தெரிவித்தார். தற்போது எந்த முடிவும் தெரியாததால், செய்யூரிலுள்ள தன் உறவினர் வீட்டில் தங்கியுள்ள துர்காதேவி அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல், தவித்து வருவதாகக் கூறுகிறார். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பகுதி வாசிகள், மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை