மருமகன் அடித்ததில் மாமனார் மரணம்| Dinamalar

 மருமகன் அடித்ததில் மாமனார் மரணம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

காஞ்சிபுரம்:குடும்ப தகராறு காரணமாக, மருமகன் அடித்ததில் மாமனார் இறந்தார்.திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ஷா, 70; தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மனைவி. இரு மகள்கள் உள்ளனர். இளைய மகள் லட்சுமிக்கும், அவரது கணவர் குமாருக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படும். அதனால் லட்சுமி, தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரது கணவர் குமார்; ஆட்டோ ஓட்டுனர். தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று மாலை, 3:00 மணியளவில், மாமனார் வீட்டுக்கு வந்து, குமார் தகராறு செய்துள்ளார். இதில், மோகன்ஷாவுக்கும் மருமகன் குமாருக்கும் தகராறு முற்றியது. இதில், மோகன்ஷாவை கன்னத்தில் குமார் அடித்துள்ளார். கீழே விழுந்த அவரை, வீட்டில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து, போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பின், தாலுகா போலீசார் அங்கு சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.