முழு அளவில் ரேஷன் பொருள் பெற ஜூன் முதல் 'ஆதார்' எண் கட்டாயம் | முழு அளவில் ரேஷன் பொருள் பெற ஜூன் முதல் 'ஆதார்' எண் கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முழு அளவில் ரேஷன் பொருள் பெற ஜூன் முதல் 'ஆதார்' எண் கட்டாயம்

Added : மே 21, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
முழு அளவில் ரேஷன் பொருள், ஜூன் முதல், ஆதார் எண் கட்டாயம், Aadhaar card,ஆதார்,ஆதார் அட்டை

ரேஷனில் 'ஆதார்' எண் வழங்கியவர்களுக்கு மட்டுமே முழு அளவில் பொருட்களை வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசம்; சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை, குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. ரேஷன் முறைகேட்டை தடுக்க தற்போது, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இதற்காக, ஏற்கனவே உள்ள கார்டுதாரர்களிடம் இருந்து, ரேஷன் கடைகளில், ஆதார் எண் விபரம் பெறப்பட்டது.

தற்போது, 1.90 கோடி ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், 1.35 கோடி கார்டுதாரர்கள், தங்கள் வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரங்களை வழங்கி உள்ளனர். மீதமுள்ளவர்களில், 53 லட்சம் கார்டுதாரர்கள், பாதி உறுப்பினர்களின் விபரங்களை தந்துள்ளனர். இரண்டு லட்சம் பேர், ஒருவரின் ஆதார் விபரத்தையும் வழங்கவில்லை.

இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்தது முதல், ரேஷன் கார்டில், நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு, 20 கிலோ இலவச அரிசி; அதற்கு மேல் உள்ள, ஒவ்வொரு நபருக்கும், கூடுதலாக, 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டில் உள்ள நபர்களில், சிலரது ஆதார் விபரம் தராவிட்டாலும், முழு அளவில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு, ஆதார் விபரங்களை வழங்கியோருக்கு மட்டுமே, ரேஷன் பொருட்களை வழங்கும்படி தெரிவித்துள்ளது. இதனால், ஒரு கார்டில், ஆதார் விபரம் தந்தவர்களை மட்டும் கணக்கில் எடுத்து, பொருட்கள் வழங்கப்படும். அதை, ஜூன் முதல் செயல்படுத்த, அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூ. மோகன் - வேலூர்,இந்தியா
22-மே-201720:22:14 IST Report Abuse
மூ. மோகன் ரேஷன் கடைகளில் 'அரிசி- குடும்ப அட்டை'தாரர்களுக்கு சமீப காலமாக ஐந்து முதல் பத்து கிலோ வரை இலவச கோதுமை வழங்கப்படுகிறது. சந்தோசம். ஆனால் மானிய விலையில் விருப்பப்பட்டவர்கள் வாங்கி வந்த கோதுமை திடீரென நிறுத்தப்பட்டது. நாட்டில் ஏராளமாய் பெருகிவிட்ட நீரழிவு நோயாளிகளை கருத்தில் கொண்டு 'சர்க்கரை -அட்டை'தாரர்களுக்கும் அட்லீஸ்ட் மானிய விலையில் கோதுமை கிடைக்க வழி செய்தால் நல்லது .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மே-201708:12:01 IST Report Abuse
Srinivasan Kannaiya இதெல்லாம் சரி...முதலில் கவுன்சிலர் , வட்டம், மாவட்டம், எம் எல் ஏ , எம் பி ரேஷன் கடைவந்து ஆட்டய போடுவதை நிறுத்துங்கள்...
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
21-மே-201707:31:11 IST Report Abuse
தேச நேசன் முழு அளவில் ரேஷன் பொருள் எப்போது கிடைத்தது ?/ குறைந்தது நூறு இருநூறு கிராம் கம்மியாத்தானே தராங்க?
Rate this:
Share this comment
Cancel
KUNDRATTHU BAALAA - TPK., MARUTHA,இந்தியா
21-மே-201705:38:04 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA Right step... in right direction...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை