தவறுகள் நிறைந்த 'ஸ்மார்ட் கார்டுகளால்' அவதி | தவறுகள் நிறைந்த 'ஸ்மார்ட் கார்டுகளால்' அவதி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தவறுகள் நிறைந்த 'ஸ்மார்ட் கார்டுகளால்' அவதி

Added : மே 21, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 தவறுகள் நிறைந்த 'ஸ்மார்ட் கார்டுகளால்' அவதி

மதுரை: பழைய ரேஷன்கார்டுகளுக்கு பதில், இன்னும் ஐம்பது சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்படாத நிலையில், வழங்கப்பட்ட கார்டுகளில் அதிக தவறுகள் இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.தற்போது பயன்பாட்டிலுள்ள ரேஷன்கார்டுகளுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்படுகின்றன. இதுவரை, மூன்று தவணைகளாக 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்பட்டும் கூட, 50 சதவீதம் பேருக்கு கூட கிடைக்கவில்லை.

மதுரையில், 9 லட்சம் ரேஷன்கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இதுவரை, மூன்று தவணைகளாக 3.26 லட்சம் 'ஸ்மார்ட் கார்டுகள்' மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதே நிலைமைதான் மற்ற மாவட்டங்களிலும் நிலவுகிறது. மீதமுள்ள 'ஸ்மார்ட் கார்டுகள்' அச்சிடும் பணி, மெதுவாக நடப்பதால், நுகர்வோருக்கு வழங்குவது தாமதமாகிறது.

இந்நிலையில், ஏற்கனவே மூன்றாவது தவணையாக வழங்கப்பட்ட கார்டுகளில், குடும்பத்தலைவருக்கு பதிலாக, குடும்பத் தலைவி பெயரும், பெயர்கள், முகவரிகள் மாறி இடம் பெற்றிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சில கார்டுகளில், போட்டோக்கள் தெளிவின்றி காணப்படுகின்றன.

கார்டுகளிலுள்ள தவறுகளை சுட்டி காட்டி, விற்பனையாளர்கள் உணவுப்பொருட்களை வழங்க மறுக்கின்றனர். இதனால், அவர்களுக்கும், நுகர்வோருக்கும் மோதல்கள் ஏற்படுகின்றன. தவறுகளை திருத்த மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் அரசு பொது 'இ சேவை' மையங்களில் பொது மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சர்வர் பழுதால் 'இ சேவை' மையங்களில் விண்ணப்பங்களை பெறுவது தாமதமாகிறது.
தமிழ்நாடு ரேஷன்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: தற்போது பயன்பாட்டிலுள்ள ரேஷன்கார்டுகளில், உள் இணைப்பு தாள் வழங்கப்பட்டுள்ளது. இந்த உள்தாளை, 2018 வரை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே பொதுமக்களிடம் சரியான விவரங்களை பெற்று, பிழைகளில்லாத 'ஸ்மார்ட் கார்டுகளை' வழங்க வேண்டும். மேலும் 'ஸ்மார்ட் கார்டுகளிலுள்ள' தவறுகளை சரி செய்து கொடுக்க, சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். சர்வர் பழுதின்றி தவறுகளை உடனுக்குடன் திருத்தம் செய்யவும் அரசு முன்வர வேண்டும், என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
21-மே-201716:24:37 IST Report Abuse
Mohan Sundarrajarao தப்பு தப்பாக அடித்து கொடுப்பார்கள், பிறகு மீண்டும் தவறை திருத்த சிறப்பு முகாம் நடத்துவார்களா? புத்திசாலிகள்
Rate this:
Share this comment
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
21-மே-201715:08:51 IST Report Abuse
Harinathan Krishnanandam அனைத்து விவரங்களும் அடங்கிய மாதிரியில் பொது மக்கள் கையொப்பம் பெற்று அதனை அரசு தரப்பு விவரங்களுடன் இணைத்து அட்டைகள் தயார் செய்தால் இந்தமாதிரி குழப்பங்களுக்கு இடமே இருக்காது
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
21-மே-201710:57:09 IST Report Abuse
Needhiyin Pakkam Nil வயலும் வாழ்வும் படித்துவிட்டு வந்த அரசு ஊழியர்களுக்கு டிஜிட்டல் இந்தியாவில் வேலை கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணங்கள் அப்போ வாக்காளர் அட்டை இப்போ ஸ்மார்ட் அட்டை.. நடவடிக்கை எடுத்தால் ஸ்ட்ரைக் அப்புறம் ஓட்டு போய் விடும் அரசு ஊழியர்கள் துறை ரீதியான தவறுகளுக்கு எந்த அரசும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் ஏனெனில் அவர்களுக்கு நாட்டின் நலனை வீட ஓட்டு முக்கியம்.....
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
21-மே-201706:13:37 IST Report Abuse
Subburamu Krishnaswamy தவறுகளுக்கு காரணம் அரசு ஊழியர்களின் கடமை உணர்வின்மையே. அரசு ஊழியர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டிக்கும் தைரியம் உயர் அதிகாரிகளுக்கு இல்லை என்பதே உண்மை. செய்வன திருந்த செய் என்ற உணர்வு இப்போது மக்களிடம் குறைந்து வருகிறது . சட்ட திட்டங்களை மதிக்கும் உணர்வும் குறைகிறது . செய்யும் தவறுகளுக்கு தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் என்ற நிலை வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை