ஜெயலலிதா மறைவுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் புகார் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., மறைவுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் புகார்

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement


சென்னை, ''ஜெ., மறைவுக்கு
காரணமான, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள், சசிகலா குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, சென்னை வழக்கறிஞர்புகழேந்தி, போலீசில் புகார் செய்துள்ளார்.சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், அவர் கொடுத்துள்ள புகார் மனு:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 செப்., 22ல், உடல்நலக் குறைவால், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, மருத்துவமனை நிர்வாகம், பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டது. திடீரென, டிச., ௫ இரவு, 11:50 மணிக்கு, அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.முரணான தகவல்அவர் சிகிச்சை பெற்ற போது, அவரது உடல்நிலை குறித்து, அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், மதுசூதனன், ராமச்சந்திரன், வளர்மதி, கோகுல
இந்திரா மற்றும் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர்,முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறினர்.ஜெ., உடலை பொதுமக்கள் பார்வைக்கு, ஒரு நாள் கூட வைக்காமல், அவசரமாக, 12 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்தனர். ஜெ., மறைந்த நாளில் இருந்து, பிப்., 5 வரை, பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார்.
அவர் பதவி விலகலுக்கு பின், 'ஜெ., மறைவில் மர்மம் உள்ளது. பின்னணியில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர்; சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உள்ளார்' என்றார்.
விஜயபாஸ்கர் கூறுகையில், 'பன்னீர்செல்வத்தை தான் முதலில் விசாரிக்க வேண்டும்; அவரைத்தான், முதல் குற்றவாளியாகசேர்க்க வேண்டும்' என்றார்.பன்னீர்செல்வம்,சசிகலா, விஜயபாஸ்கர்ஆகியோரது நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை பார்க்கும் போது, ஜெ., மரணம் திட்டமிட்ட அரசியல் கொலையாக இருக்கலாம்.அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும் குறுக்கு வழியில் கைப்பற்ற,கூட்டுச்சதி செய்து கொலை செய்திருக்கலாம்.விசாரணை தேவைஇந்த கொலைக்கு, அ.தி.மு.க.,வின், ௧௨௭ எம்.எல்.ஏ.,க்கள், ௪௮ எம்.பி.,க்கள் உடந்தையாக இருந்துள்ளதாகவும், கொலையை மறைக்க, முன்னாள் அமைச்சர்கள், மருத்துவமனை நிர்வாகிகள்முயற்சித்ததாகவும்சந்தேகிக்கிறேன்.எனவே, மனுவில் குறிப்பிட்டுள்ள, 186 பேர் மற்றும் சசிகலா குடும்பத்தினர் மீது, விசாரணை செய்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில்குறிப்பிட்டு உள்ளார்.மனுவை பெற்ற போலீசார், என்ன செய்வது என, தெரியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து, போலீசார் கூறுகையில், 'மனு குறித்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்; அவர்களின் உத்தரவுப்படி செயல்படுவோம்' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை