இடுக்கரை சாலை பழுது மக்கள் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இடுக்கரை சாலை பழுது மக்கள் பாதிப்பு

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோத்தகிரி : கோத்தகிரி இடுக்கரை சாலை பழுதடைந்துள்ளதால், வாகனங்கள் மற்றும் மக்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட, இடுக்கரை ஹட்டி, இடுக்கரை காலனி மற்றும் புதுார் ஆதிவாசி கிராமங்களில், 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கோடநாடு பிரதான சாலையில் இருந்து, இக்கிராமங்களுக்கு செல்லும் சாலை, குறுகலாகவும், குழிகள் நிறைந்தும் காணப்படுகிறது. மேலும், சாலை நடுவே, பெரியளவில் மரங்கள் உள்ளன. இதனால், வாகனங்கள் சென்றுவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கோத்தகிரியில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் உட்பட, கனரக வாகனங்கள் சென்றுவரும் போது, மரங்கள் பக்கவாட்டில் உரசுவதால், பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க வலியுறுத்தி, பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இப்பகுதி மக்கள் நலன்கருதி, சாலையை விரிவுப்படுத்தி, சீரமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை