புலியை பார்த்ததால் குழுவினர் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புலியை பார்த்ததால் குழுவினர் மகிழ்ச்சி

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலுார்: முதுமலையில் நடந்த யானைகள் கணக்கெடுப்பின் போது, புலி நேரில் தென்பட்டுள்ளது.முதுமலை புலிகள் காப்பகத்தில், கடந்த, 17ம் தேதி முதல், மூன்று நாட்கள் கணக்கெடுப்பு நடந்தது. யானைகள் கணக்கெடுப்பு பணிகளை, தேசிய யானைகள் பாதுகாப்பு திட்ட இயக்குனர் ராஜேஸ்ஸ்ரீவஸ்தவா நேற்று, ஆய்வு செய்தார்.இப்ளபணியில் ஈடுப்பட்ட, 28 குழுவில், அக்னிபெளட்டா பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட குழுவுக்கு மட்டும், ஒரே ஒரு புலி தென்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.வனத்துறையினர் கூறுகை யில், 'முதுமலையில், 50க்கு மேற்பட்ட புலிகள் உள்ளன. எனினும், அவைகளை நேரடியாக பார்க்க முடியாது. இதன் காரணமாக தான், தானியங்கி கேமரா மூலம், புலிகள் கணக்கெடுப்பு நடத்தி, அவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வருகிறது' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை