கண்டன ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண்டன ஆர்ப்பாட்டம்

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பந்தலுார்: நெல்லியாளம் நகராட்சியை கண்டித்து பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நெல்லியாளம் நகர பா.ஜ., சார்பில், பந்தலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர துணை தலைவர் தீபக்ராம் தலைமை வகித்தார். சட்டமன்ற பொறுப்பாளர் வக்கீல் பரசுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். அதில், வலியுறுத்தப்பட்ட கோரிக்கை: பந்தலுார் இன்கோ நகரில், 80-குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கழிப்பிடம், சாலை, நடைபாதை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். எம்.ஜி.ஆர்.நகர் குடிநீர் தேக்க தொட்டி துார்வாராமல் சேறும், சகதியுமாக உள்ளதால், இதனை சீரமைத்து, சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்; அம்பேத்கார் காலனியில் கழிவுநீர் கால்வாய்கள் துார்வாராமல் உள்ளதால், தொற்றுநோய்கள் பரவி வருகிறது. இதனை சுத்தப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை