ஜனாதிபதி வரும் ஹெலிகாப்டர் இறங்கும் இடம் திடீர் மாற்றம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement


காஞ்சிபுரம், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் ஹெலிகாப்டர் இறங்கு தளம், பச்சையப்பன் ஆண்கள் கல்லுாரி விளையாட்டு மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து
வருகின்றன.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வரும் புதன்கிழமை காஞ்சிபுரம் வருகிறார். ஏனாத்துார் சங்கரா பல்கலைக் கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதற்காக, சென்னையில் இருந்து, ஹெலிகாப்டர் மூலம், ஏனாத்துார் சங்கரா கல்லுாரி வளாகத்தில் இறங்கி, அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மன் ஆகிய கோவில்களில் தரிசனம் முடித்துக் கொண்டு, சங்கர மடம் செல்வதாக அறிவிக்கப்பட்டது.
பின், ஜனாதிபதியுடன் இரு ஹெலிகாப்டரில் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் வருவதால், சங்கரா கல்லுாரி வளாகத்தில் அதற்கான இடவசதி இல்லாத காரணத்தால், இடம் மாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லுாரி வளாகத்தில், மூன்று ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அங்கிருந்து, கார் மூலம், வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மன் கோவில்களுக்கு செல்கிறார். அதை முடித்துக் கொண்டு, சங்கர மடம் செல்கிறார். அன்று மாலை, சங்கரா பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்