செல்லாத ரூபாய் நோட்டு: மர்மம் நீடிப்பது ஏன்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செல்லாத ரூபாய் நோட்டு: மர்மம் நீடிப்பது ஏன்?

Updated : மே 21, 2017 | Added : மே 21, 2017 | கருத்துகள் (2)
Advertisement
செல்லாத ரூபாய் நோட்டு: மர்மம் நீடிப்பது ஏன்?

தமிழகத்தில், கோடிக்கணக்கில், பழைய செல்லாத ரூபாய் நோட்டுகள் சிக்குவது தொடர் கதையாகி விட்டது. ஆனால், அவற்றை மாற்றித் தர உத்தரவாதம் தந்தவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

நாடு முழுவதும், 2016 நவம்பர், 8ல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டன. அதே ஆண்டு, டிசம்பருடன் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் காலக்கெடு முடிந்தாலும், அதை கமிஷனுக்கு மாற்றித் தருவதாக, பல கும்பல்கள் மோசடியை அரங்கேற்றி வருகின்றன.


டாக்டர் பணம்


மார்ச், 25ல், சென்னை, மணப்பாக்கம் பகுதியில், 3.42 கோடி ரூபாய், பழைய நோட்டுகளை வைத்திருந்த ஒரு கும்பலை, போலீசார் மடக்கிப் பிடித்தனர். அந்த பணம், டில்லியில் வசிக்கும் தமிழக டாக்டர் ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. பின், மார்ச், 30ல், சென்னை, ஷெனாய் நகர் அருகே சிலரை பிடித்த போலீசார், 1.02 கோடி ரூபாய், செல்லாத நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல, ஏப்ரல், 17ல், காரைக்குடியில், 51.56 லட்சம் ரூபாயும், ஏப்., 21ல், சென்னை, கொடுங்கையூர் பகுதியில், 1 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை, கோடம்பாக்கத்தில், தண்டபாணி என்பவரிடம் இருந்து, 45 கோடி ரூபாய், செல்லாத நோட்டுகளை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில், பைனான்சியர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், மேற்கண்ட சம்பவங்களில் உண்மையான குற்றவாளி யார் என்பதை, போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

செல்லாத ரூபாய் நோட்டுகளை எங்கோ, யாரோ மாற்றி தர தயாராக இருப்பது தெரிய
வருகிறது. ஆனால், இடைத்தரகர்கள் தான் பிடிபடுகின்றனர். அவர்களை தாண்டி விசாரிப்பதற்கு, உரிய முயற்சியை, போலீசார் எடுக்கவில்லை.


கடிதம்


இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:


சென்னை, மணப்பாக்கத்தில் பிடிபட்ட தொகைக்கு, டில்லி டாக்டர் வருமான வரி செலுத்த சம்மதித்தார். ஆனால், இதர வழக்குகளை, போலீசார் தான் கையாண்டனர். பிடிபட்ட நபர்களிடம், தீவிர விசாரணை மேற்கொண்டால், உண்மை வெளிவரலாம்.

யாரோ ஒருவர் உத்தரவாதம் அளிப்பதாலேயே, பழைய நோட்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதை, கிரிமினல் வழக்காக பதிவு செய்து, பிடிபட்டவர்களிடம் விசாரிக்க வேண்டும். இதன் பின்னணியில், பெரிய மோசடி இருக்கலாம். சென்னையில் பிடிபட்ட, செல்லாத ரூபாய் நோட்டுகள் தொடர்பாக, ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியிருந்தோம்.

செல்லாத ரூபாய் நோட்டுகள் பற்றி, அவர்களால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும்; ஆனால், தயக்கம் காட்டுகின்றனர். இதுவரை, எங்கள் கடிதத்திற்கு பதில் அனுப்பவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

-- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A. Sivakumar. - Chennai,இந்தியா
21-மே-201715:31:13 IST Report Abuse
A. Sivakumar. //யாரோ ஒருவர் உத்தரவாதம் அளிப்பதாலேயே, பழைய நோட்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.// சரியான பாயின்ட் . இத்தனை காலம் ஆகியும், திரும்பப் பெற்ற ரூபாய் நோட்டுக்களின் முழுமையான கணக்கை ரிஸர்வ் வங்கி இன்னும் ஒப்படைக்காமல் இழுத்தடிப்பது குறிப்பிடத்தக்கது. கன்டெயினர்களில் பிடிபட்ட பணக்குவியல்களை வங்கியின் பணம் என்று சொன்னது, சட்டபூர்வமாகச் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னரும், இந்த பழைய நோட்டுகள் இன்னும் பிடிபடுவதும் நிறைய சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. அடுத்த தேர்தலில் மத்திய அரசு திரும்பவும் காங்கிரஸ் வசம் போனால், பாஜக நிறைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். பாஜகவின் ஊழல்கள் என்று அவர்கள் வேறு அடுத்த இன்னிங்க்ஸை ஆட ஆரம்பிப்பாங்க. மக்களைப் பத்தி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
21-மே-201711:19:18 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இந்த கட்டுக்களை அப்படியே தீயவச்சு கொளுத்தணும் அப்போதான் இதுபோல செய்யும் அறிவாளிகளுக்கு உரைக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை