பணம், ஆட்டோ பறிப்பு இரு பெண்கள் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement


புழல், பயணிகள் போல் நடித்து, கத்தியை காட்டி மிரட்டி பணம், அலைபேசி மற்றும் ஆட்டோவை பறித்த கும்பலில், இரு பெண்கள் சிக்கினர்.
தண்டையார்பேட்டை, நேரு நகர், 1வது தெருவைச் சேர்ந்தவர் சேதுலிங்கம், 43; ஆட்டோ ஓட்டுனர். இவரது ஆட்டோவில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், தண்டையார் பேட்டையில் இருந்து புழல் காவாங்கரைக்கு செல்ல, இரு தம்பதியர் ஏறினர்.
புழல் சைக்கிள் ஷாப் ரெட்டை ஏரி அருகே சென்ற போது, ஆட்டோவில் இருந்த இரு ஆண்கள், சிறுநீர் கழிக்க வேண்டுமெனக் கூறி, ஆட்டோவை நிறுத்தினர்.
பின், கத்தியை காட்டி சேதுலிங்கத்தை மிரட்டி, 2,000 ரூபாய் மற்றும் அலைபேசியை பறித்த அவர்கள், அவரை அடித்து கீழே தள்ளிவிட்டு, ஆட்டோவை கடத்திச் சென்றனர். இதையடுத்து சேதுலிங்கம், புழல் போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில், மீஞ்சூர் போலீசாரின் வாகன சோதனையில், இந்த ஆட்டோவிலிருந்த ஆண்கள் தப்பியோடினர்; பெண்கள் மட்டும் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், புழலில் ஆட்டோ ஓட்டுனரை அடித்து பணம், அலைபேசி மற்றும் ஆட்டோவை கடத்தி சென்றது தெரியவந்தது.
இரு பெண்களையும் கைது செய்த புழல் போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்