கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு நிதி ஒதுக்கியும் பயனில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு நிதி ஒதுக்கியும் பயனில்லை

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மஞ்சூர் : மஞ்சூர் பகுதி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தொடரும் 'கோட்டா' முறையால், உறுப்பினர் கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில், மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, எடக்காடு, இத்தலார், மேற்குநாடு, கைக்காட்டி, மகாலிங்கா உள்ளிட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், உள்ள அங்கத்தினர்கள், தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை அந்தந்த கூட்டுறவு தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர். நடப்பாண்டு, துவக்கத்திலிருந்து பரவலாக பெய்த மழையால், தேயிலை செடிகளுக்கு நல்ல ஈரப்பதம் ஏற்பட்டு, செடிகள் துளிர்விட்டன. இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக இங்குள்ள பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகளில் வழக்கத்தை விட பசுந்தேயிலை வரத்து அதிகரித்தது. கொள்முதல் செய்யப்பட்ட இலைகளை தொழிற்சாலைகளில், கொட்டி வைக்க இடம் இல்லாததால், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக 'கோட்டா' முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தேயிலை விவசாயிகளின் தோட்டங்களில், ஓராண்டுக்கு பின்பு, தற்போது வரத்து அதிகரித்ததுடன், விலையும் ஓரளவுக்கு கிடைத்து வருவதால், பொருளாதார நெருக்கடி ஓரளவு குறைந்து வந்தது. அதற்குள் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வரும் கோட்டா முறையால், அறுவடைக்கு தயாரான, இலைகளை பறிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இலையும் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஐந்து கோடி ரூபாய் வீண்சிறு தேயிலை விவசாய சங்க உறுப்பினர் ரமேஷ் கூறுகையில், '' மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை புனரமைத்து, கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, அ.தி.மு.க., அரசு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியது.'இந்த நிதி ஒதுக்கீட்டால், கூட்டுறவு தொழிற்சாலையை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்' என, ஊட்டிக்கு மலர் கண்காட்சிக்கு வந்த, மாநில முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.''ஆனால், கூட்டுறவு தொழிற்சறாலைகளில் உட்பட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாத காரணத்தால் அடிக்கடி 'கோட்டா' முறை அறிவிக்கப்படுகிறது. இத னால், அங்கத்தினர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தேயிலை வரத்து அதிகரிக்கும் போது, தடையின்றி வாங்கும் வகையில், கூடுதலாக 'டிரப்'களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். கூட்டுறவு தொழிற்சாலை மேலாண்மை இயக்குனர் சாமி கூறுகையில்,''தொழிற்சாலைகளில், கூடுதலாக 'டிரப்' அமைப்பது குறித்து, உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை