காட்டேஜ்களுக்கு லாரிகளில் போகும் தண்ணீர் உள்ளூர் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காட்டேஜ்களுக்கு லாரிகளில் போகும் தண்ணீர் உள்ளூர் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் உள்ள காட்டேஜ்களுக்கு, அதிகளவில் தண்ணீர் வினியோகிக்கப்படுவதால், குடியிருப்புகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட காட்டேஜ்கள் உள்ளன. இதில், 100க்கும் மேற்பட்ட காட்டேஜ்கள், குடியிருப்புகள் என்ற பெயரில் அனுமதி பெற்றுக்கொண்டு, வர்த்தக ரீதியாக செயல்படுகின்றன. அவற்றுக்கு, பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்கி வருவதால், பேரூராட்சி நிர்வாகத்திற்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இது ஒருபுறம் இருக்க, நடப்பாண்டு, வறட்சி காரணமாக, ஈளாடா தடுப்பணை வற்றிவிட்டதாலும், அளக்கரை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாததாலும், கோத்தகிரி நகரில், கடுமையான குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. இந்த தட்டுபாட்டை தவிர்க்க, பேரூராட்சி நிர்வாகம், கூடுமாவனரை லாரிகளில் தண்ணீர் வினியோகித்து வருகிறது.இருப்பினும், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளால், இங்குள்ள காட்டேஜ்கள் நிரம்பி வருகின்றன. இந்த காட்டேஜ்களுக்கு அதிகளவில் தண்ணீர் லாரிகளின் மூலம் வினியோகிப்பதால், உள்ளூர் மக்களுக்கான தண்ணீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்மந்தப்பட் உயர் அதிகாரிகள் பேரூராட்சி லாரிகளை ஆய்வு செய்து, மக்களுக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை