தொடரும் இன்ஜின் பிரச்னை அடிக்கடி நிற்கும் மலை ரயில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடரும் இன்ஜின் பிரச்னை அடிக்கடி நிற்கும் மலை ரயில்

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குன்னுார் : மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வந்த மலை ரயில், இன்ஜின் நீராவி அழுத்தம் குறைவு காரணமாக, ஒரு மணி நேரம் காலதாமதமாக வந்து சேர்ந்தது.நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டி வருகிறது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள், மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், நேற்று காலை, 7:10 மணிக்கு மேட் டுப்பாளையத்தில் இருந்து, 210 பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் இன்ஜினில் நீராவி அழுத்தம் குறைவு ஏற்பட்ட காரணமாக, 'லெவல் கிராசிங்' உட்பட ஆங்காங்கே நின்று, நின்று வந்தது. இதனால், காலை, 10:00 மணிக்கு வர வேண்டிய மலை ரயில் பகல், 11:15 மணிக்கு குன்னுாருக்கு வந்து சேர்ந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.பின்னர் பகல், 11:30 மணிக்கு குன்னுாரில் இருந்து ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, கூடுதலாக, 87 பயணிகளுடன் ஊட்டிக்கு புறப்பட்டு சென் றது. இதனால், டிக்கெட் வாங்கி காத்திருந்த சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந் தனர்.சுற்றுலா பயணிகண்ணன் கூறுகையில், ''மலர் கண் காட்சியை காண வாகனத்தில் வந்து, மிகவும் தாமதமாக ஊட்டி ரயிலில் ஏறியதால், ஒரு மணி நேரம் வீணானது'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை