சோளிங்கர் அடகு நிறுவனத்தில் தங்க நகை மோசடி: மூவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சோளிங்கர் அடகு நிறுவனத்தில் தங்க நகை மோசடி: மூவர் கைது

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


வேலுார், வேலுார் மாவட்டம் சோளிங்கரில் தனியார் தங்க நகை அடகு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில், தங்க நகை அடமானம் வைப்பவர்களுக்கு, உடனுக்குடன் கடன் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கணக்கு விபரங்களை, சென்னை ஆடிட்டர்கள் தணிக்கை செய்தனர். அதில், 3,008 கிராம் தங்க நகை மாயமானது தெரியவந்தது.
இது குறித்து, சோளிங்கர் போலீசில், இந்நிறுவனத்தின் சார்பில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை செய்தனர். சோளிங்கர் கிளை மேலாளர் சிவலிங்கம், 40, பெண் துணை மேலாளர் சரண்யா, 30, வங்கி எழுத்தர் அன்பு, 35, ஆகியோர், இந்த நிறுவனத்தில், பொதுமக்கள் அடகு வைத்த தங்க நகைகளை, யாருக்கும் தெரியாமல் எடுத்துள்ளனர்.
அதே பகுதியில் இயங்கி வரும், அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் நகை மதிப்பீட்டாளர் பாபுவிடம் கொடுத்து, நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுத் தரும்படி கூறி உள்ளனர். இதற்கு, 25 சதவீதம் கமிஷன் தர பேரம் பேசியுள்ளனர்.
ஆனால், நகைகளை அடமானம் வைத்து, பணத்துடன் பாபு தலைமறைவாகிவிட்டான். இந்த வகையில், இந்த நிறுவனத்தில் பொது மக்கள் அடமானம் வைத்த, 82 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 376 சவரன், மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, கிளை மேலாளர் சிவலிங்கம், துணை மேலாளர் சரண்யா, எழுத்தர் அன்பு ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். பணத்துடன் தலைமறைவான பாபுவை தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை