கால்வாய்களில் அடைப்பு மழை வந்தால் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாய்களில் அடைப்பு மழை வந்தால் பாதிப்பு

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி : ஊட்டி, வண்ணாரப்பேட்டையில் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பால், மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, 5வது வார்டு வண்ணாரப்பேட்டை பகுதியில், 800க்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் வசதியில்லை.மழை நீர் செல்ல போதிய கட்டமைப்பு வசதிகளும் இல்லை. மழை சமயத்தில், கழிவுநீருடன் மழை நீர் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்து வருகிறது. சமீபத்தில் பெய்த மழையிலும் கூட குடியிருப்புகளில் கழிவுநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வினியோகமும் இல்லை, பொது கழிப்பிடங்களில் தண்ணீர் வசதி இல்லை. நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், சுகாதார துறை ஊழியர்கள் யாரும் வரவில்லை. இப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடமும் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இங்குள்ள மழை நீர் கால்வாய்களை சுத்திகரிப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை