கோடநாடு காட்சிமுனையில் சிறப்பு அம்சங்கள் அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோடநாடு காட்சிமுனையில் சிறப்பு அம்சங்கள் அவசியம்

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோத்தகிரி : கோத்தகிரி கோடநாடு காட்சிமுனையில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்வது அவசியமாகி உள்ளது. கோத்தகிரியில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் உள்ள கோடநாடு காட்சிமுனை, மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுள் சிறப்பு பெற்றுள்ளது. இங்கிருந்து, மேடநாடு, பவானி அணை, வளைந்து நெளிந்துச்செல்லும் மாயாறு, தெங்குமரஹாடா கிராமம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க சுஜ்ஜல் கோட்டை ஆகிய காட்சிகளை காண முடியும்.இதனால், நீலகிரி மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு சுற்றுலா வருபவர்கள், இந்த இயற்கை காட்சிகளை கண்டுக்களித்துச் செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில், கோடை விழா துவங்கி, காய்கறிக் கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி போன்ற நிகழ்வுகள் முடிந்துவிட்டன. இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில், 121வது மலர் கண்காட்சி நடந்து வருகிறது.வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து, மலர் கண்காட்சியை, கண்டுக்களித்த நுாற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், குழந்தைகளுடன் கோடநாடு காட்சிமுனைக்கு நேற்று வருகை தந்தனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோபுரத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'பைனாகுலர்' மூலம், இயற்கை காட்சிகளை கண்டுக்களித்தனர். அதே நேரத்தில், கோடநாடு காட்சிமுனை பகுதியில், சிறுவர்களுக்காக புதிய சுற்றுலா ஏற்பாடுகள் செய்திருக்கும் பட்சத்தில், சிறுவர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. காட்சிமுனை கோபுரத்தை ஒட்டி, தாழ்வான பகுதி, புதர் சூழ்ந்து காலியாக காணப்படுகிறது. வனத்துறைக்கு சொந்தமான இந்த இடத்தை, மிக நேர்த்தியாக புல்தரையாக மாற்றி, சிறப்பு ஏற்பாடுகளுடன் பூங்காவாக மாற்றலாம்.தவிர, காட்சிமுனை கோபுரத்தில் இருந்து, தாழ்வான பகுதியில் உள்ள பாறை இடையே, 100 மீட்டர் துாரத்திற்கு 'ரோப்கார்' வசதி ஏற்படுத்தினால், சிறுவர்கள் உட்பட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறுகையில், “நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சூழல், வன விலங்குகள் மற்றும் கானுயிர் குறித்து, புகைப்படங்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதன்படி, கோடநாடு காட்சிமுனையில், தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தில், 16.70 லட்சம் ரூபாய் செலவில், விழிப்புணர்வு அரங்கு அமைக்கும் பணி நடக்கிறது. இங்கு, வனத்திற்கு ஆபத்து இல்லாமல், தாழ்வான பகுதியில், மூலிகை செடிகள் மற்றும் சோலை நாற்றுகள் நடவுச்செய்து,'சோலை பூங்கா' உருவாக்கப்படும்,” என்றார்.-

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை