பூங்காவுக்குள் விலங்குகள் வருவதால் அச்சம் | Dinamalar

பூங்காவுக்குள் விலங்குகள் வருவதால் அச்சம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

குன்னுார் : குன்னுார் சிம்ஸ்பூங்கா வில், வனவிலங்குகள் வருவதை தடுக்க, 2.08 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது.குன்னுாரில் உள்ள சிம்ஸ்பூங்கா, கடந்த, 1874ல் உருவாக்கப்பட்டது. 1,200க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களின் புகலிடமாக உள்ள இப்பூங்காவில், 104 ஆண்டு பழமை வாய்ந்த யானைக்கால் மரம், ருத்ராட்சை, காகி தம், டர்பன்டைன், ஜெகரன்டா, கெமேலியா, அகேசியா உட்பட பல்வேறு மரங்கள் உள்ளன. இப்பூங்காவில், வரும், 27,28ம் தேதி பழக்கண்காட்சி நடக்கிறது. இதற்காக, 3 லட்சத்து 60 ஆயிரம் மலர் செடிகளில், மலர்கள் பூத்துள்ளன. இந்த பூங்காவில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி தாமரை என்பவரை, காட்டெருமை ஒன்று முட்டியதால், அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, சிம்ஸ்பூங்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த தோட்டக்கலை துறை முடிவு செய்தது.சமீபத்தில், இங்கு வந்த, மலைப்பயிர் மற்றும் தோட்டக்கலை துறை இயக்குனர் அர்ச்சனா பட்நாயக், இந்த சம்பவங்கள் குறித்து அறிந்து, தடுப்புச்சுவர் அமைக்க பரிந்துரை செய்தார். தற்போது, இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் மணி கூறுகையில், ''குன்னுார் சிம்ஸ்பூங்காவில், 1,900 மீட்டரில், அதாவது, 1.9 கி.மீ., துாரத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது. இதற்கான, 2.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் இதற்கான பணிகள் துவங்கும். அடுத்த கட்டமாக பழவியல் நிலைய த்தை சுற்றியும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது. கண்காணிப்பு நட வடிக்கையும் தொடரும்,'' என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.