தொழிற்சாலையை மீண்டும் திறந்தால் பயன் மாநில முதல்வரிடம் விவசாய சங்கம் மனு| Dinamalar

தொழிற்சாலையை மீண்டும் திறந்தால் பயன் மாநில முதல்வரிடம் விவசாய சங்கம் மனு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோத்தகிரி : 'கீழ்கோத்தகிரியில் மூடப்பட்ட இன்கோ தொழிற்சாலையை மீண்டும் திறக்கவேண்டும்' என, விவசாயிகள் மற்றும் தொழிற்சாலை அங்கத்தினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.கோத்தகிரி விவசாயிகள் மற்றும் தொழிற்சாலை உறுப்பினர்கள் சார்பில், விவசாய சங்க நிர்வாகி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மகாலிங்கம், மாநில முதல்வரிடம் அளித்த மனு: கீழ்கோத்தகிரி பகுதியில், 1966ம் ஆண்டு துவக்கப்பட்ட இன்கோ - 4 தொழிற்சாலை, 35 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கிவந்தது. தொழிற்சாலையில், 1996 முதல், 2001வரை, நடந்த நிர்வாக சீர்கேடு காரணமாக, 'லே-ஆப்' செய்யப்பட்டு, 2003ல் நிர்வாக குழு கலைக்கப்பட்டு, கடன் வழங்கிய 'தாய்கோ' வங்கியிடம், தொழிற்சாலை ஒப்படைக்கப்பட்டது. மூன்று முறை ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த விவசாயிகளின் முயற்சியால், ஏலம் நடவடிக்கை தடுக்கப்பட்டது.இத்தொழிற்சாலையில், 1,128 முன்னாள் உறுப்பினர்களின் பங்கு மூலம்தனம், 35 லட்சம் ரூபாய் உள்ளது. இந்த தொழிற்சாலையை திறக்க, குன்னுார் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., ஆகியோரின், ஒப்புதலுடன், தமிழக கூடுதல் முதன்மை செயலர், ஆணையர் மற்றும் தொழிற் வணிக இயக்குனர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டும், இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், கீழ்கோத்தகிரி பகுதி தேயிலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, விவசாயிகள் நலன்கருதி, தொழிற்சாலையை புனரமைத்து, மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, மகாலிங்கம் கூறியுள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.