நக்சல் வேட்டை: விஜயகுமார் புது தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நக்சல் வேட்டை: விஜயகுமார் புது தகவல்

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 நக்சல் வேட்டை: விஜயகுமார் புது தகவல்


கோவை, ''மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், மாவோயிஸ்டுகள் முற்றிலும் ஒடுக்கப்படுவர்,'' என, உள்துறை அமைச்சக பாதுகாப்பு
ஆலோசகர் விஜயகுமார் தெரிவித்தார். உள்துறை அமைச்சக பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார், சந்தன மரம் கடத்தல் வீரப்பன் குறித்து எழுதிய புத்தக வெளியீட்டு விழா, நேற்று கோவையில் நடந்தது. இதில், பங்கேற்க வந்த அவர், கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: மாவோயிஸ்டுகள் மக்கள் கூட்டத்தில் இருந்து, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு நாங்கள் பதில் தாக்குதல் நடத்தினால் மக்கள் பாதிக்கப்படுவர். அதிகளவு சேதம் ஏற்படும் என்பதால், பதில் தாக்குதல் கொடுக்க சிரமம் ஏற்படுகிறது. மாவோயிஸ்ட் பாதிப்பு இருக்கும் பகுதிகளில், சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு அதிகமான மனஅழுத்தம் உள்ளது.சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வீரர்கள் பலியாகினர்.
அச்சமயம் அவர்கள் அஜாக்கிரதையாகஇருந்தனரா என்பது குறித்து, விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு
உள்ளது. இது போன்ற தாக்குதல் சம்பவங்களால், சி.ஆர்.பி.எப்., ஒருபோதும் தளர்ந்துவிடாது; மீண்டும் எழுச்சியுடன் செயல்பட்டு வருகிறது. மாவோயிஸ்ட் போராட்டங்களும், அதற்காக அவர்கள் சொல்லும் காரணங்களையும் ஏற்று கொள்ளலாம். ஆனால், ஆயுதங்கள் இல்லாத பேச்சுக்கு வரவேண்டும்.
மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு, மாவோயிஸ்டுகள் முற்றிலும் ஒடுக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை