திருவிழாவுக்கு மாட்டு வண்டி பயணம் பாரம்பரியத்தை மறக்காத பக்தர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவிழாவுக்கு மாட்டு வண்டி பயணம் பாரம்பரியத்தை மறக்காத பக்தர்கள்

Added : மே 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
திருவிழாவுக்கு மாட்டு வண்டி பயணம் பாரம்பரியத்தை மறக்காத பக்தர்கள்


அபிராமம் ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே, 56 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், திருவிழாவுக்காக, மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து, எட்டு நாட்கள், 200 கி.மீ.,க்கு பயணிக்கின்றனர்.
அபிராமம் மற்றும் சிவகங்கை மாவட்டம், ஆரியூர் உட்பட, 56 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புதுப்பட்டியில் உள்ள
கூடமுடையர் சுவாமி, கீழராஜகுலராமனில் உள்ள இருளப்பசாமி, ஸ்ரீவில்லிபுத்துார் அருகே தைலாபுரத்தில் உள்ள வீரகாளியம்மனை குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, கொண்டாடப்படும் கோவில் திருவிழாவுக்காக, கமுதி அருகேயுள்ள அகத்தாரிருப்புக்கு வந்து தங்கி, மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து, 200 கி.மீ., துாரத்தை, எட்டு நாட்கள் பயணித்து, திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து அகத்தாரிருப்பு ஹரிநாராயணன் கூறியதாவது:
எங்கள் கோவில் திருவிழாவுக்காக, அகத்தாரி
ருப்பில் முதல் நாளே வந்து தங்குவோம். பின், தனித்தனி குழுக்களாகப் பிரிந்து, இருளப்பசாமி, வீரகாளியம்மனுக்கு, 5ம் நாள் இரவு கிடாவெட்டி, அன்னதானம் வழங்கு வோம்.
பின், அந்த தெய்வங்களை பக்தர்கள் புடைசூழ, கூடமுடையர் சுவாமி கோவிலுக்கு அழைத்துச் சென்று. 8வது நாள் கிடா வெட்டி விரதத்தை முடிப்போம். சொந்த ஊருக்கு, 13ம் நாள் திரும்புவோம். 400க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் கூடாரம் அமைத்து செல்கிறோம்.
இதனால், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, வெளியூர் சொந்தங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை