ஸ்மிருதியை துரத்தும் கல்வித்தகுதி வழக்கு Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஸ்மிருதியை துரத்தும் கல்வித்தகுதி வழக்கு

புதுடில்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த வழக்கில், அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது, அவருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மிருதி, துரத்தும், கல்வித்தகுதி, வழக்கு

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 41, ராஜ்யசபா, எம்.பி.,யாக உள்ளார். தற்போது ஜவுளித் துறையை கவனித்து வரும் அவர், முதலில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, டில்லியைச் சேர்ந்த அகமது கான் என்பவர், டில்லி கோர்ட்டில்,

ஒரு வழக்கு தொடர்ந்தார்.பொய் தகவல் 'மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2004 லோக்சபா தேர்தலின் போது, 1996ல் டில்லி பல்கலையில், பி.ஏ.,தேர்ச்சி பெற்றதாக கூறினார்.
அதே நேரத்தில், மற்றொரு தேர்தலில், டில்லி பல்கலை தொலைதுாரக் கல்வி மூலம், பி.காம்., தேர்ச்சி பெற்றதாக கூறியுள்ளார். அவர் பட்டப் படிப்பையே முடிக்கவில்லை. தேர்தல் கமிஷனுக்கு பொய்யான தகவல் அளித்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த ஆதாரங்கள் ஏதும் தங்களிடம் இல்லை என, டில்லி பல்கலையும்,தேர்தல் கமிஷனும் தெரிவித்தன. இந்த வழக்கை, டில்லி கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

தலைவலி


இந்த தீர்ப்பை எதிர்த்து, அகமது கான், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisement

அதை விசாரணைக்கு ஏற்ற ஐகோர்ட், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
'அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்த பின்னே, தேவைப்பட்டால், ஆஜராகும்படி, ஸ்மிருதி இரானிக்கு ஐகோர்ட் உத்தரவிடும். அதனால், தற்போதைக்கு அவருக்கு பிரச்னை இல்லை என்றாலும், இது அவருக்கு ஒரு தலைவலிதான்' என, வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
24-மே-201721:31:27 IST Report Abuse

Vasanth Saminathanஆடிய ஆட்டம் என்ன

Rate this:
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
24-மே-201718:51:40 IST Report Abuse

Anantharaman Srinivasanடான்சி வழக்கில் நம்ம அம்மா கையெழுத்தே என்னுது இல்லை என்றார்களே அதைவிடவா இது மோசம். ஒருவேளை பி ஏ, பிகாம் படிக்க ஆசை பட்டு இருப்பார்கள்.

Rate this:
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
24-மே-201718:47:54 IST Report Abuse

Anantharaman Srinivasanஆளு கொஞ்சம் அழகாக இருந்து கலராவும் இருந்து விட்டால் பி எச் டி என்று சொன்னாலும் நம்பிவிடுவார்கள். அரசியலுக்கு படிப்பு தேவை இல்லயே, பின் ஏன் பச்சை புளுகு புளுகிறார்கள். இந்த விஷயத்தில் டாக்டர் கலைஞர் அரிச்சந்திரன்.

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X