காதல் 'செட்' ஆகாத கமலஹாசன்| Dinamalar

காதல் 'செட்' ஆகாத கமலஹாசன்

Added : மே 25, 2017
Advertisement
காதல் 'செட்' ஆகாத கமலஹாசன்

எல்லோரிடமும் நிச்சயம் ஏதாவது ஒரு திறமை இருக்கும். அதை நாம் தான் தேடிக் கண்டுபுடிக்கணும். அப்படி தனக்குள் இருந்த பேச்சாளரை, நடன கலைஞரை, நடிகரை கண்டுபிடித்து இன்று சின்னத்திரையில் தோன்றி, பெரிய திரையிலும் ஜொலிக்க தயாராக இருக்கிறார் நடிகர் கமலஹாசன். என்னா...து கமலஹாசனா...? ஆமாங்க. இவரு பெயரும் கமலஹாசன்தான்...அவருடன் பேசியதிலிருந்து:* கமல் பற்றி...சொந்த ஊர் துாத்துக்குடி. படிச்சது எம்.எஸ்சி., தாவரவியல்.* சினிமாவில் எப்படி...கல்லுாரியில் படிக்கும் போது 'அந்நியன்' விக்ரம் மாதிரி அதிகமா முடி வச்சிருந்தேன். எல்லாரும் அந்நியன் மாதிரி பண்ண சொன்னாங்க. நானும் விளையாட்டா பண்ணினேன். 'நீ பேசமா நடிக்க போலாம்னு சொன்னாங்க. முயற்சி பண்ணிதான் பார்ப்போமேன்னு உள்ளூர் 'டிவி'களில் தொகுப்பாளரா சேர்ந்தேன். அப்புறம் எப்.எம்.,மில் ரேடியோ 'ஜாக்கி'. பின் 'டிவி சீரியலுக்கு' மாறினேன்.* சினிமாவில் இப்போ..?'ஒத்தைக்கு ஒத்த' படத்தில் அதர்வாவுடனும், 'நீ இன்னும் புரிஞ்சுக்கல' படத்தில் ஹீரோவாகவும் நடிச்சிருக்கேன். படம் சீக்கிரமே 'ரிலீஸ்' ஆக போகுது. மேலும் சில படங்களில் நடிக்கவுள்ளேன்.* பிடித்தவர்கள்..?நடிகர் கமலஹாசன் (அவரு பேர வச்சுகிட்டு பிடிக்காம இருந்தா எப்படி), இயக்குனர் திருமுருகன், கவிஞர் நா.முத்துக்குமார்.* அம்மா பேச்சை மீறமாட்டீங்களாமே?பயம் இல்ல. அம்மாவ ரொம்ப பிடிக்கும். அவங்க பேச்சை மீறவே மாட்டேன்.* நீங்கள் சமையலில் கில்லாடினு கேள்விபட்டோம்?அப்படியெல்லாம் இல்லே. பேச்சுலர் வாழ்க்கையில கத்துக்கிட்டது. ஆனா, நல்லா சமைக்கத் தெரியும்.* நீங்களும் காதல் மன்னனா?ஸ்கூல், காலேஜ்னு நிறைய 'லவ்' பண்ணியிருக்கேன். என்னமோ எனக்கு 'லவ்' 'செட்' ஆகல.* நம்ம பசங்களுக்குன்னு...சொல்லிட்டா போச்சு. எல்லார் கிட்டேயும் ஒரு திறமை இருக்கும் அதை வெளில கூட்டிட்டு வாங்க. அப்புறம், எந்த துறையா இருந்தாலும் உங்களுக்குனு ஒரு இடம் உண்டு. சும்மா ஜமாய்க்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X