Southwest Monsoon hits Kerala, North East | கேரளாவில் துவங்கியது பருவமழை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் துவங்கியது பருவமழை

Updated : மே 30, 2017 | Added : மே 30, 2017 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: இரண்டு நாளுக்கு முன்னதாகவே, தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


கணிப்பு:

நாடு முழுவதும், மார்ச் மாதத்தில் கோடைக் காலம் துவங்கியது. வெயிலின் தாக்கத்தால், தமிழகம் முழுவதும் அனல் காற்று வீசியது. மே, 4ல் துவங்கிய கத்திரி வெயில், 24 நாட்கள் அனலாய் ஆட்டம் போட்டு, கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், மேற்கு திசையிலிருந்து,நம் நாட்டை நோக்கி வீசும் கடல் காற்று, வலுவடைய துவங்கி உள்ளது. அதனால்,.தென் மேற்கு பருவமழை, கேரளாவில் துவங்கும் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ற படி, 'தென் மேற்கு பருவமழை, எதிர்பார்த்தபடி கேரளாவில் இன்று(மே 30) துவங்கும்' என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கணிப்புபடி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவக்கம்


மகிழ்ச்சி:

இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் ஜெனரல் கேஜே ரமேஷ் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் துவங்கியுள்ளது. பருவமழை முன்கூட்டியே துவங்கியதற்காக மோரோ புயல் காரணம் இதற்காக புயலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 முதல் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-மே-201717:36:07 IST Report Abuse
Rockie-பாலியல் ஜனதா கட்சி அட காவி செம்பு தூக்கிகளா, ஆர்வக்கோளாறுல இங்கயும் வந்து உங்க காவித்துண்ட விரிச்சிட்டீங்களா. மழைக்கும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்..
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
30-மே-201713:44:55 IST Report Abuse
vns பருவமழை கேரளாவில் துவங்கவும் தமிழக்தில் மழை பெய்யாமல் இருப்பதற்கும் காரணம் மோடி மற்றும் BJP மற்றும் கேரளா மாநிலம் தான். கருத்து கூறுவது தமிழன், தங்கை ராஜா, நல்லவன் மற்றும் தீவிரவாதிகள்..
Rate this:
Share this comment
mukundan - chennai,இந்தியா
30-மே-201715:49:44 IST Report Abuse
mukundanஆமா இதற்க்கு தனி நாடு தான் ஒரே தீர்வு, தனி நாடு வந்துவிட்டால் பின் தனி தமிழ் வானம் மற்றும் தனி தமிழ் மழை மேகமும் வேண்டும் என்று இந்திரனிடம் சென்று போராடுவோம் - இப்படிக்கு சீமான், திருமா மற்றும் சொம்புகள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X